கடந்த மே மாதம் 10ஆம் தேதி தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் பதவியேற்றபோது, மாநிலத்தின் தற்போதைய நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்ற அதிரடி அறிவிப்பை மேடையிலேயே வெளியிட்டிருந்தார். அந்த முக்கிய வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், தமிழ்நாடு நிதி அமைச்சர் மரியவில்சன் மாநிலத்தின் நிதிநிலை குறித்த விரிவான வெள்ளை அறிக்கையை இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.
இந்த அறிக்கை தொடர்பாகப் பல்வேறு முக்கியத் தரவுகளைப் பகிர்ந்து கொண்டு வரும் அவர், தமிழ்நாட்டின் தற்போதைய பொருளாதாரச் சூழல், கடன்பொறுப்புகள் மற்றும் வருவாய் பற்றாக்குறை ஆகியவற்றுக்கான காரணங்கள் குறித்தும், நிதிநிலையைச் சீரமைப்பதற்கான அரசின் அடுத்தகட்ட திட்டங்கள் குறித்தும் ஊடகங்கள் வாயிலாகத் தொடர்ந்து விளக்கமளித்து வருகிறார்.
