தமிழக வெற்றிக் கழகம் அமைக்கவுள்ள புதிய கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக மாணிக்கம் தாகூர் அல்லது தொல். திருமாவளவன் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பான தகவல்கள் கசிந்துள்ளன. இந்தக் கூட்டணியில் மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகிய கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் உறுப்பினர்களாக இடம்பெற உள்ளதாகத் தெரிகிறது.
அதேவேளையில், கூட்டணியை வழிநடத்தும் ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு தனக்குக் கிடைக்கும் என பெரிதும் எதிர்பார்த்திருந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இந்த நகர்வால் கடும் அதிர்ச்சியிலும் மனவருத்தத்திலும் இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், கூட்டணிக் கட்சிகளை ஒருங்கிணைக்கும் வகையில் ‘மதச்சார்பற்ற’, ‘சமூகநீதி’ உள்ளிட்ட கொள்கை முழக்கங்களை உள்ளடக்கிய வலிமையான பெயர் ஒன்று கூட்டணிக்குச் சூட்டப்பட பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
