நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சி அமைத்து, அக்கட்சியின் தலைவர் விஜய் தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில், தான் வெற்றி பெற்ற பெரம்பூர் தொகுதியில் நிலவும் மக்கள் பிரச்சினைகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று கண்டுகொள்ளவில்லை என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வந்தன. இந்த விமர்சனங்களுக்கு தவெக-வின் முக்கிய நிர்வாகியான ஆனந்த்ஜீத் தற்போது புதியதொரு விளக்கத்தை அளித்துள்ளார்.
முதலமைச்சர் விஜய் பெரம்பூர் தொகுதிக்குச் செல்லவில்லை என்று நினைப்பது தவறு என்றும், அவர் யாருக்கும் தெரியாமல் மாறுவேடத்தில் பல இடங்களுக்குச் சத்தமில்லாமல் ரவுண்ட்ஸ் சென்று கொண்டிருக்கிறார் என்றும் ஆனந்த்ஜீத் குறிப்பிட்டுள்ளார். தனது இந்த ரகசியப் பயணங்கள் மூலம் எங்கு ரோடு சரியில்லை, எங்கு என்ன தட்டுப்பாடு நிலவுகிறது போன்ற மக்கள் பிரச்சினைகளை முதலமைச்சர் துல்லியமாகக் குறித்து வைத்துள்ளதாகவும், அதற்கான தீர்வு நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
திமுக ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக விமர்சிக்கும் மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோவிற்கு, திமுகவைக் குறை கூற எந்த தகுதியும்…
தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களின் இ-கேஒய்சி (eKYC) சரிபார்ப்புப் பணிகளை 100 சதவீதம் நிறைவு செய்யும் நோக்கில், இன்று (செப்டம்பர் 19)…
அதிமுகவிலிருந்து விலகி மாற்று முகாமிற்குச் சென்ற சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தலா ரூ.35 கோடி வரை கொடுக்கப்பட்டதாக முன்னாள் பேரவைத் துணைத்…
தமிழக முதல்வர் விஜய்யின் மிசா குறித்த பேச்சுக்கு அரசியல் ரீதியாகப் பதிலடி கொடுக்கும் வகையில், 'தி மிசா மார்க்' என்ற…
டெல்லியைச் சேர்ந்த ' பெஜெயின்டில் ' என்ற சமூக வலைதளப் படைப்பாளி , இரவில் பெண்களின் பாதுகாப்பைச் சோதித்துப் பார்க்க…
நாட்டின் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிதாரி தொடர் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சுரேந்தர் கோலி, ஹரித்வாரின் பூபத்வாலா பகுதியில்…