பணம் கேட்குறாங்க..! இந்த கட்சியே வேண்டாம் சாமி… கட்சியில் இருந்து விலகிய தவெக நிர்வாகி… பெரும் பரபரப்பு…!!

By Soundarya on பங்குனி 23, 2026

Spread the love

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்து, 30 தொகுதிகளுக்குமான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார். ஏப்ரல் 9ஆம் தேதி நடைபெறவுள்ள இந்தத் தேர்தலுக்காக, கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் முன்னிலையில் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டனர். அரசியலில் தடம் பதிக்கும் விஜய்யின் இந்த அதிரடி முடிவு, புதுச்சேரி அரசியல் களத்தில் ஒரு புதிய சவாலை உருவாக்கியுள்ளது.

இருப்பினும், இந்த வேட்பாளர் அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே கட்சிக்குள் கடும் அதிருப்தி வெடித்துள்ளது. தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டவர்களிடமும், விருப்ப மனு அளித்தவர்களிடமும் கட்சி நிர்வாகிகள் பெரும் தொகையை பணமாகக் கேட்பதாகப் புகார் எழுந்துள்ளது. “மக்களுக்காகப் பணியாற்ற வந்த இடத்தில் பணத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படுவதா?” எனத் தவெகவின் அடிமட்டத் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் தங்கள் ஆதங்கத்தைப் பகிரங்கமாக வெளிப்படுத்தி வருகின்றனர்.

   

இந்த விவகாரத்தின் உச்சகட்டமாக, அதிருப்தி அடைந்த சில நிர்வாகிகள் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்யும் விதமாக, கட்சியின் துண்டு மற்றும் விஜய் படங்களை தரையில் வைத்துவிட்டு கட்சியை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளனர். பல ஆண்டுகளாக விஜய்யின் ரசிகர்களாக இருந்து, இப்போது அரசியல் பாதையில் பயணிப்பவர்களுக்கு இந்தச் சம்பவம் பெரும் மனவேதனையை அளித்துள்ளது. கட்சி ஆரம்பிக்கப்பட்ட சில காலத்திலேயே எழுந்துள்ள இந்த ‘சீட்’ சர்ச்சை, புதுச்சேரி தேர்தலில் தவெகவின் வெற்றியைப் பாதிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.