“கல்விக் குழுவா? அரசியல் களமா?”.. அனந்த்ஜித் நியமனத்தால் வெடித்த சர்ச்சை… அடுத்தடுத்து வெளிவரும் அதிர்ச்சி பின்னணி…. விஜய்க்கு அடுத்த சிக்கல்…!

By Nanthini on ஆடி 1, 2026

Spread the love

தமிழகப் பள்ளிப் பாடநூல் தயாரிப்பிற்கான புதிய குழுவில், தமிழக வெற்றிக் கழகத்தின் செய்தி தொடர்பாளர் கே.எஸ்.டி. அனந்த்ஜித் நியமிக்கப்பட்டுள்ள விவகாரம் தற்பொழுது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கல்வி சார்ந்த முடிவுகளை எடுக்கும் ஒரு முக்கியக் குழுவில், நடுநிலையான கல்வியாளர்களுக்குப் பதிலாக ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியின் பிரதிநிதியை ஏன் இணைக்க வேண்டும் என்ற காரசாரமான விமர்சனங்களும், எதிர்ப்புகளும் பல்வேறு தரப்பினரிடமிருந்து எழுந்துள்ளன.

ஏற்கனவே இதே குழுவில் ராதன் பண்டிட் மற்றும் ஜெகதீஷ் பழனிசாமி ஆகியோரின் நியமனங்களுக்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியிருந்த நிலையில், இந்த சர்ச்சை மேலும் தீவிரமடைந்துள்ளது. இதுமட்டுமன்றி, அண்மையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டங்களில் தவெக-வின் முக்கிய வியூக வகுப்பாளரான ஜான் ஆரோக்கியசாமி பங்கேற்றதும் கடுமையான அரசியல் விமர்சனங்களுக்கு உள்ளாகி, கல்வித்துறையில் ஆளுங்கட்சியின் தலையீடுகள் மற்றும் அரசியல் நகர்வுகள் குறித்த விவாதங்களை சமூக வலைத்தளங்களிலும் அரசியல் வட்டாரத்திலும் அனல் பறக்க வைத்துள்ளது.