FLASH NEWS: கரூர் சம்பவம்: SIT-க்கு எதிராக… அடுத்த அதிரடியில் இறங்கிய தவெக…!!

By Soundarya on ஐப்பசி 8, 2025

Spread the love

TVK தலைவர் விஜய் சமீபத்தில் கரூரில் நடத்திய தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தனி நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு வழக்கு தொடர்பாக விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. அதேசமயம் கட்சியின் நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களை கைது செய்யவும் போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள். இந்த  விவகாரம் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை சென்னை HC அமைத்திருந்தது.

வடக்கு மண்டல ஐ.ஜி அஸ்ரா கர்க் தலைமையிலான குழு அக்.5-ம் தேதி அன்று விசாரணையை தொடங்கியது. இந்த நிலையில், இந்த விசாரணை குழுவுக்கு தடை கோரி SC-யில் தவெக கட்சி மேல்முறையீடு செய்துள்ளது. தங்களுடைய கருத்தை கேட்காமல் குழுவை அமைத்ததாகவும், SIT குழு பாரபட்சமாக விசாரணை நடத்தும் என்றும் தங்களுடைய  மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.