இப்படி சிக்கிட்டியே பங்கு..! பைக்கை திருடிய தவெக நிர்வாகி… தீர்ந்துபோன பெட்ரோல்.. கடைசியில காமெடியா போச்சே…!!

By Soundarya on கார்த்திகை 15, 2025

Spread the love

நெல்லை மாவட்டம் விஎம் சத்திரத்தைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்பவரது பைக் கடந்த 12ஆம் தேதி புதிய பஸ் நிலையத்தில் காணாமல் போயுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்  இது தொடர்பாக அவர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை தொடங்கிய சிறிது நேரத்தில் இருவர் பைக்கை தள்ளி வந்துள்ளார்கள். அப்போது போலீசார் விசாரித்ததில் மாட்டிக் கொண்டனர்.

அவர்களிடம் போலீசார் கிடுக்குபிடி விசாரணை மேற்கொண்டதில் விசாரணையில் அவர்களில் ஒருவர் தவெக நிர்வாகி முத்துக்குமார் என்பதும் மற்றொருவர் தங்கராஜா என்பதும் தெரியவந்தது. பைக்கை திருடி சென்றுவிட்டு பெட்ரோல் காலியானதால் பைக்கை அதே இடத்தில் விட வந்த போது இருவரும் சிக்கியுள்ளார்கள்.