தமிழகத்தில் நாளுக்கு நாள் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் தேர்தல் களமும் சூடு பிடிக்க தொடங்கிவிட்டது. ஒவ்வொரு கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தொகுதி பங்கீடு என தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக விஜயின் தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இணைந்தது பரபரப்பாகவே பார்க்கப்படுகிறது. அதிமுகவில் இருந்த நீக்கப்பட்ட செங்கோட்டயன் அடுத்து என்ன செய்யப் போகிறார் என்று அனைவரும் காத்திருந்த நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக அவர் விஜயின் தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைந்தார். அவருக்கு கட்சியில் முக்கிய பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கட்சியை மேலும் வலுப்படுத்தும் முயற்சியில் விஜய் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் தமிழக வெற்றிக்கழகம் பூத் ஏஜெண்டுகள் எண்ணிக்கையை அதிகரிக்கும் பணியில் விஜய் தீவிரம் காட்டி வருகின்றார். பூத் ஏஜெண்டுகளுக்கான விண்ணப்பங்களை விரைவில் பூர்த்தி செய்து தலைமைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என தமிழக வெற்றி கழகம் தரப்பிலிருந்து மாவட்ட செயலாளர்களுக்கு உத்தரவு பறந்துள்ளது. ஒவ்வொரு பூத்துக்கும் ஒரு ஏஜென்ட் என்ற எண்ணிக்கையை 10 ஆக உயர்த்த தமிழக வெற்றிக்கழகம் அண்மையில் அறிவுறுத்தி இருந்தது. அதன் அடிப்படையில் பணிகள் தற்போது முடுக்கி விடப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் கோடை வெயில் சுட்டெரிக்கும் இந்த வேளையில், உடல் நலனைப் பேணுவது மிகவும் அவசியமான ஒன்று. வெப்ப அலைகளின் தாக்கத்திலிருந்து…
ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அந்நாட்டின் மீதான அழுத்தத்தை அதிகரிக்கும் நோக்கில் அமெரிக்கா தனது கடற்படை பலத்தை அரபிக்கடலில்…
இன்றைய காலகட்டத்தில் பள்ளிச் சேர்க்கை முதல் அரசு நலத்திட்டங்கள் வரை அனைத்திற்கும் ஆதார் கார்டு மிக முக்கியமான ஆவணமாக உள்ளது.…
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தற்போது கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தவெக வேட்பாளராகக் களம்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் தற்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ள நிலையில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் (EPS),…
தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் தற்போது மீண்டும் சீராகத் தொடங்கியுள்ளது பொதுமக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக முன்பதிவு செய்த…