Categories: சினிமா

“நான் பண்ணது தப்பு தான், மன்னிச்சுக்கோங்க”.. TVK மாநாட்டில் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்ட தொகுப்பாளினி துர்கா..!

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக ஜொலித்துக் கொண்டிருக்கும் விஜய் தற்போது சினிமாவிலிருந்து விலகி முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளார். இவருடைய தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி.சாலை பகுதியில் நேற்று பிரமாண்டமாக நடைபெற்றது. தமிழகம் மட்டுமல்லாமல் வெளிமாநிலத்தில் இருந்தும் வந்து பல லட்சம் தொண்டர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர். விஜய் ஆனந்த கண்ணீர் சிந்தும் அளவிற்கு தொண்டர்களின் அன்பு அந்த இடத்தில் நிறைந்திருந்தது. வெயிலையும் பொருட்படுத்தாமல் விஜய்க்காக லட்சக்கணக்கான தொண்டர்கள் காத்திருந்தனர். இதனைத் தொடர்ந்து மாநாட்டுக்கு வந்த விஜய் மூத்த தலைவர்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய பிறகு கட்சி கொடியை ஏற்றினார்.

தொடர்ந்து கட்சியின் கோட்பாடுகள் வாசிக்கப்பட்டன. அதில் மக்களை கவரும் வகையிலான பல்வேறு அறிவிப்புகள் இடம் பெற்று இருந்தது. இதனைத் தொடர்ந்து தனது தொண்டர்களுடன் உரையாற்ற தொடங்கிய விஜய் ஒரு குழந்தை மற்றும் பாம்பு கதையை சொல்லி தனது உரையை தொடங்கினார்.  விஜய்யை தொடர்ந்து மாநாட்டின் நிகழ்ச்சிகளை தனது கணீர் குரலில் தொகுத்து வழங்கிய தொகுப்பாளினி கவிபாரதி துர்கா அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். விஜய் மேடையில் என்ட்ரி ஆக தொடங்கியதில் இருந்து மாநாடு முடியும் வரை ஒவ்வொரு நிகழ்ச்சிகளையும் வர்ணனை செய்தார். அதோடு மாநாடு முடிவில் விஜயும் இவரை பாராட்டினார்.

இந்த நிலையில் தனக்கு கிடைத்த ஆதரவுக்கு நன்றி தெரிவித்தும் மறுபக்கம் எழுந்த விமர்சனங்களுக்கு மன்னிப்பு கேட்டும் தொகுப்பாளினி கவி பாரதி துர்கா வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், இந்தப் பெரிய மேடையை எனக்கு கொடுத்த தலைவர் தளபதி அவர்களுக்கும் பொதுச் செயலாளருக்கும் நான் கடமைப்பட்டுள்ளேன். வாய்ப்பு வழங்கிய அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவிக்கிறேன். மக்களின் ஆதரவுக்கு மிகுந்த நன்றி. இது போன்ற ஆதரவு என்னை போன்ற சாமானிய பெண்ணுக்கு உத்வேகம் அளிக்கும். எதிர்பாராத ஆதரவு அளித்துள்ளீர்கள். என்னுடைய வளர்ச்சியில் உங்களுக்கு பங்கு இருக்கும் என்று கூறியுள்ளார். மேலும் அவர் குறித்த விமர்சனங்களுக்கு பதில் அளித்துள்ள அவர், அந்த நிகழ்ச்சியை நான் தான் தொகுத்து வழங்கப் போகிறேன் என்று அன்னைக்கு தான் எனக்கு தெரியும். ஏதோ என்கிட்ட டாபிக் கொடுத்து பேச வைப்பாங்கன்னு நினைச்சேன்.

 

ஆனா முழு நிகழ்ச்சியையும் நான்தான் தொகுத்து வழங்கப் போறேனு அன்னைக்கு தான் என்கிட்ட சொன்னாங்க. தளபதி அவர்கள் வந்துவிட்டார் என்று சொல்லும் போது நான் அவருடைய தீவிர ரசிகையாக மாறிவிட்டேன். அப்போதுதான் முதல்முறையாக அவரை பார்த்தேன். அந்த நிமிடம் என்னால் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியவில்லை. அதனால்தான் அப்படி பேசி விட்டேன். பிறகு நான் ஒரு தொகுப்பாளினி என்று என் உணர்வுகளை கட்டுப்படுத்திக் கொண்டு குரலை கட்டுப்படுத்தி பேச ஆரம்பித்தேன். அப்படிப் பேசியதற்கு நான் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன், நான் செய்தது தவறு தான் என்று விமர்சனங்களுக்கு அவர் பதில் அளித்துள்ளார்.

Nanthini

Recent Posts

தமிழகம் முழுவதும் அனைத்து மகளிருக்கும்.. CM விஜய் காலையிலேயே அதிரடி…!

சேலத்தில் தொடங்கி வைக்கப்பட்டுள்ள 'சிங்கப்பெண்' அதிரடிப் படை, தமிழக அரசியலில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. தமிழக முதல்வராக விஜய்…

11 minutes ago

“பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்!… இனி 3 நாட்களில் பணம் உங்கள் கையில்… மத்திய அரசின் மெகா அறிவிப்பு”…!!!

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) தனது 7 கோடி உறுப்பினர்களுக்கான பணப்பலன்களைப் பெறும் முறையை அதிரடியாக எளிமைப்படுத்தி…

12 minutes ago

BREAKING: CNG விலையும் உயர்ந்தது… காலையிலேயே அடுத்தடுத்த ஷாக்…!

பெட்ரோல் மற்றும் டீசல் விலையேற்றத்தைத் தொடர்ந்து, தற்போது வாகனங்களுக்கான CNG விலையும் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு முன்பு ஒரு கிலோ…

17 minutes ago

வறுத்த எண்ணெயை மீண்டும் பயன்படுத்துகிறீர்களா?… உடனே இதை நிறுத்துங்கள்… என்ன ஆபத்து நடக்கும் தெரியுமா?… ஊட்டச்சத்து நிபுணர் கூறும் அதிர்ச்சி தகவல்…!!!

சமையல் எண்ணெயை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், வறுத்த எண்ணெயை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவது இன்று பல வீடுகளில்…

22 minutes ago

சளி முதல் இருமல் வரை ஒரே நாளில் விரட்டணுமா?… இந்த ஒரு கப் ‘மேஜிக்’ ரசம் போதும்… மருத்துவர்கள் சொல்லும் அதிரடி உண்மை…!!!

கடலோரப் பகுதிகளான தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் நண்டு ரசம் ஒரு சிறந்த மருத்துவ உணவாகக் கருதப்படுகிறது. சளி, இருமல் மற்றும்…

32 minutes ago

“ஜசி பாய் மீது நம்பிக்கை இருக்கு!” ஹர்திக், சூர்யா இல்லாததால் பும்ராவுக்கு கிடைத்த கேப்டன் பதவி.. மும்பை இந்தியன்ஸ் அதிரடி அறிவிப்பு..!!

பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணிக்கு எதிரான இன்றைய முக்கியமான ஐபிஎல் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக நட்சத்திர வேகப்பந்து…

38 minutes ago