கமர்சியல் திரைப்படங்களை தாண்டி வாழ்வியலை எடுத்துக் கூறும் வகையில் தனித்துவமான கதைகளை தேர்வு செய்து படம் இயக்கும் இயக்குனர்கள் ஒரு சிலர் மட்டுமே உள்ளனர். அதன்படி தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் தான் இயக்குனர் வெற்றிமாறன். இவர் இயக்கத்தின் சூரி ஹீரோவாக நடித்த கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியான திரைப்படம் தான் விடுதலை. சூரிய குமரேசன் என்ற கதாபாத்திரத்தில் கான்ஸ்டபிள் ஆக நடித்திருந்த நிலையில் இவருக்கு ஜோடியாக நடிகை பவானி ஸ்ரீ நடித்திருந்தார். விஜய் சேதுபதி மக்கள் படை தலைவர் பெருமாள் வாத்தியார் என்ற லீட் ரோலில் நடித்திருந்தார். பெருமாள் வாத்தியாரின் மனைவி கதாபாத்திரத்தில் மலையாள நடிகை மஞ்சு வாரியார் நடித்துள்ளார்.
இவர் குறித்த காட்சிகள் முதல் பாகத்தில் இடம்பெறாத நிலையில் இரண்டாம் பாகத்தில் இடம்பெற உள்ளன. அதே சமயம் முக்கிய கதாபாத்திரத்தில் அனுராக் காஷ்யப், கிஷோர், சேத்தன், ராஜுவ் மேனன் போன்ற ஏராளமான பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் ஜெயமோகன் எழுதிய துணைவன் என்ற சிறுகதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இதில் சூரி தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மத்தியில் ஹீரோவாக இடம் பிடித்தார். இதனைத் தொடர்ந்து விடுதலை 2 படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் விறுவிறுப்பாக நடந்து முடிந்த நிலையில் தற்போது அனைத்து பணிகளும் முடிந்து ரிலீசுக்கு தயாராகியுள்ளது.
இந்த படம் டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு சமீபத்தில் அறிவித்திருந்தது. இந்த நிலையில் விடுதலை 2 படத்தின் டப்பிங் பணிகள் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. எப்படியாவது படத்தை டிசம்பர் 20ஆம் தேதி வெளியிட வேண்டும் என்பதில் வெற்றிமாறன் உறுதியாக உள்ளார். இப்படியான நிலையில் படத்தை முழுமையாக வெற்றிமாறன் பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் அதில் சில பேட்ச் ஒர்க் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பாண்டியராஜனுடன் நடித்துக் கொண்டிருக்கும் விஜய் சேதுபதியை ஒரு வாரம் அனுப்பி வைக்குமாறு வெற்றிமாறன் கேட்டுள்ளார். சில பேட்ச் ஒர்க் பணிகள் மீண்டும் நடைபெற உள்ளதால் விடுதலை 2 படப்பிடிப்பு மீண்டும் தள்ளி போகுமா என்று ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.
சிம்லாவில் அமைந்துள்ள துணை ஆணையர் அலுவலக வளாகத்தில் எதிர்பாராத விதமாகத் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. வங்கியில் பணத்தைச் செலுத்துவதற்காக ஒருவர்…
விஜயவாடா கிருஷ்ணலங்கா பகுதியில் உள்ள ராமையா தங்கும் விடுதி அறையில், பைடிசெட்டி எர்ரம்மா என்ற பெண் மர்மமான முறையில் கொலை…
வாரங்கல் நகரின் கரிமாபாத் பகுதியில் பட்டப்பகலில் ஐயப்ப பக்தர்கள் போல் வேடமணிந்து வந்த இருவர், பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து…
நவம்பர் 10-ம் தேதி குருகிராமில், முன்பகை காரணமாக நிதின் என்ற 25 வயது இளைஞர் கும்பல் ஒன்றால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…
பாலிவுட் நடிகர் சரத் கபூர், தனது குடும்பத்தைப்போல வளர்த்து வந்த நான்கு செல்லப் பிராணிகளான நாய்களை மும்பையில் உள்ள விலங்குகள்…
குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள மேட்பூர் கிராமத்தில், சாதி மறுப்பு காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 21 வயது மகளைத்…