தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றங்களை மேற்கொள்வதற்கும், அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் அமைச்சர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கும் முதலமைச்சர் விஜய் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக, தொடர் சர்ச்சைகளில் சிக்கி வருபவர்கள் மற்றும் தங்களது குடும்ப உறுப்பினர்களை அரசு நிர்வாகத்தில் தலையிட அனுமதிக்கும் அமைச்சர்களின் பட்டியலைத் தயாரிக்குமாறு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த “கிளீன் ஆபரேஷன்” நடவடிக்கையின் மூலம் சுமார் 7 முதல் 8 அமைச்சர்கள் வரை பதவியிலிருந்து நீக்கப்படலாம் என்றும், தற்போது நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவடைந்த உடனேயே இந்த அதிரடியான அமைச்சரவை மாற்றம் அரங்கேறும் என்றும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
