திமுகவின் ‘திடீர்’ ட்விஸ்ட்… கடுப்பான திருமா…. தவெக கூட்டணியின் பின்னணியில் இருக்கும் சீக்ரெட்… இத யாரும் எதிர்பார்க்கலையே….!

By Nanthini on ஆவணி 18, 2026

Spread the love

தமிழக அரசியலில் தவெக உடனான கூட்டணியை தொல். திருமாவளவன் உறுதிப்படுத்தியதன் பின்னணியில் பல்வேறு அரசியல் நகர்வுகள் அலசப்பட்டு வருகின்றன. திமுக பாஜகவிடம் காட்டிவரும் மென்மையானப் போக்கும் நெருக்கமுமே திருமாவளவனின் இந்த முடிவுக்கு முதன்மை காரணமாகக் கூறப்படுகிறது. “அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை” என்ற நடைமுறை அரசியல் நிலைப்பாட்டிற்குள் திமுக இறங்குவதை கொள்கை ரீதியாக அவரால் ஏற்க முடியவில்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

மேலும், விசிக இந்த முடிவை தள்ளிப்போட்டால், தவெகவின் கூட்டணி ஆதரவு பாமக பக்கம் சாய்ந்துவிடும் என்ற அச்ச உணர்வும், நேற்றைய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அவர் அவசரமாக வெளியிட்டதற்கு முக்கியக் காரணமாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.