“தூங்கிய 4 வயது மகனை மூச்சு திணறடித்து…” நெருங்கிய நண்பரை வர சொன்ன இளம்பெண்… இரட்டை கொலை வழக்கில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

By Devi Ramu on ஆவணி 18, 2026

Spread the love

பெங்களூரு சிக்கபானவரா குட்டே பசவேஸ்வர நகர் பகுதியில், 34 வயதான அபினந்தன் மற்றும் அவரது 4 வயது மகன் யதுவீர் ஆகிய இருவர் வீட்டில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டனர். திங்கள்கிழமை அதிகாலை நடந்த இச்சம்பவம் குறித்து அபினந்தனின் தாயார் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறில், மனைவி ஹரிணி சமையலறை கரண்டியால் அபினந்தனைத் தாக்கியதாகத் தெரியவந்துள்ளது.

அதன்பின்னர் ஹரிணி தனக்கு நெருக்கமான வினய் என்பவரை வீட்டிற்கு வரவழைத்து, அவருடன் இணைந்து அபினந்தனைத் தாக்கிப் படுகொலை செய்ததாகப் போலீசார் சந்தேகிக்கின்றனர். அப்போது தூக்கத்திலிருந்து எழுந்த 4 வயது குழந்தை யதுவீரையும் மூச்சுத்திணறடித்துக் கொன்றுவிட்டு, ரத்தக் கறைகளைச் சுத்தம் செய்து, சிசிடிவி கேமராக்களைச் செயலிழக்கச் செய்ததாகக் கூறப்படுகிறது. தலைமறைவாக உள்ள முக்கியச் சந்தேக நபரான வினயைப் பிடிக்கப் போலீசார் தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.