தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவத்தில், திமுகவைச் சேர்ந்த நான்கு சட்டமன்ற உறுப்பினர்களை (MLA) தவெக தன்பக்கம் இழுக்கப் பேரம் நடத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. நாகர்கோவில் ஆஸ்டின், வேப்பனஹள்ளி சீனிவாசன், கோவில்பட்டி கருணாநிதி மற்றும் திருச்செந்தூர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகிய நான்கு எம்.எல்.ஏ-க்களை ராஜினாமா செய்ய வைக்க தவெக பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறி, திமுகவினர் தமிழக ஆளுநரிடம் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்துள்ளனர்.
இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கோவில்பட்டி தவெக மாவட்டச் செயலாளர் இதுதொடர்பாகப் பேசிய பேச்சுக்கு, திமுக எம்.எல்.ஏ கருணாநிதி உடனடியாக மறுப்பு தெரிவித்துத் தனது விளக்கத்தை அளித்துள்ளார்.
