முதலமைச்சர் விஜயின் பேச்சு, அதற்கு திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்ட விளக்க வீடியோ, அதனைத் தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகம் (தவெக) முன்வைத்துள்ள காரசாரமான விமர்சனங்கள் எனத் தமிழக அரசியல் களம் பெரும் சூடடைந்துள்ளது. மிசா சட்டத்தின்கீழ் ஸ்டாலின் கைது செய்யப்பட்டது குறித்த சட்டப்பேரவை விவாதமும், அதற்கு பதிலடியாக இரு தரப்பிலிருந்தும் வெளியாகும் அறிக்கைகளும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
முன்னதாக சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் விஜய், ஸ்டாலின் மிசா காலத்தில் கைது செய்யப்பட்டிருந்தாலும், அவர் மீது மிசா வழக்குகள் ஏதும் பதிவு செய்யப்படவில்லை என்றும், கடந்த 50 ஆண்டுகளாகக் கட்டமைக்கப்பட்ட போலி பிம்பங்கள் உடைத்தெறியப்படும் என்றும் பேசியிருந்தார். இதற்கு விளக்கமளித்து வீடியோ வெளியிட்ட ஸ்டாலின், தான் சிறையில் அனுபவித்த கொடுமைகளையும், தந்தை கருணாநிதி தன்னை காவல்துறையிடம் ஒப்படைத்த நிகழ்வுகளையும் குறிப்பிட்டிருந்தார். மேலும் தவெக அரசின் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும் கடுமையாகச் சாடியிருந்தார்.
ஸ்டாலினின் இந்த விளக்க வீடியோவிற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ சமூகவலைதளப் பக்கத்தில் சுடச்சுட அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், “பல ஆண்டுகளாகக் கட்டமைக்கப்பட்ட ‘சிறை சென்ற தியாகி’ என்ற போலி பிம்பம் உடைந்த பதற்றத்தில்தான் இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இத்தனை நீளமாகப் பேசியும், மிசா கைதுக்கான ஆவணம் (Detention Copy) பற்றி மட்டும் மூச்சுவிடாதது ஏன்?” எனத் தவெக நேரடியாகக் கேள்வி எழுப்பியுள்ளது.
மேலும், “உண்மைக்கு விளம்பரங்களோ, விளக்கங்களோ தேவையில்லை; பல கட்டுகளுடன் (Cuts) உணர்வற்ற முறையில் வெளியான இந்த வீடியோ, பொய் பிம்பத்தைத் தக்கவைக்க முயலும் படுதோல்வி முயற்சியாகும்” என்றும் தவெக விமர்சித்துள்ளது. ஒருபுறம் வரலாற்றை யாராலும் மாற்ற முடியாது என ஸ்டாலின் தரப்பும், மறுபுறம் ஆவணங்கள் மூலம் போலி பிம்பங்கள் அம்பலமாகிவிட்டன எனத் தவெக தரப்பும் மாறி மாறி அறிக்கைப்போரில் ஈடுபட்டு வருவது தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
உங்களுக்கு உடல்நலம் சரியில்லாமல் போனதும், இந்த நாள் இவ்வளவு சிரமமாக அமைந்ததும் வருத்தமளிக்கிறது. காய்ச்சலோடு அதிகாலையிலேயே விழிப்பதும், உடம்பில் தெம்பே…
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ராஜ்பாத் நகர் எக்ஸ்டென்ஷன் பகுதியில் அமைந்துள்ள விண்ட்சர் பாரடைஸ் குடியிருப்பு லிஃப்ட்டில், செல்லப்…
தாய்லாந்தின் புகழ்பெற்ற நீர்வீழ்ச்சி பகுதிக்குச் சென்ற சுற்றுலாப் பயணி ஒருவரின் தோளில் எதிர்பாராதவிதமாக வௌவால் ஒன்று வந்து அமர்ந்தது. பயத்தில்…
தந்தையின் அன்பு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாத தூய்மையானது. தன் பிள்ளைகளின் மகிழ்ச்சிக்காகத் தன் சொந்த ஆசைகளைக்கூடப் புன்னகையோடு தியாகம் செய்யும்…
மும்பையின் மிகவும் புகழ்பெற்ற மற்றும் வழிபடப்படும் லால்பாக் சா ராஜா விநாயகர் சதுர்த்தி 2026 விழாவை முன்னிட்டு, முக்கியப் பிரமுகர்கள்…
மும்பையின் மிகவும் புகழ்பெற்ற லால்பாக் சா ராஜா விநாயகர் பந்தலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பாலிவுட் நடிகரும் சண்டைக்கலைஞருமான வித்யுத்…