மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகம் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் இணைந்து நடத்திய பிரம்மாண்ட தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் ஆரவாரமின்றித் முடிந்துள்ளது. வழக்கமான தேர்தல் எழுச்சிக்கு மாறாக, மேடையில் இருந்த கூட்டணிக் கட்சித் தலைவர்களின் முகங்களில் சோகமும், பேசடிய தலைவர்களின் குரலில் சோர்வும் அப்பட்டமாகத் தெரிந்தன. தலைவர் விஜய் இக்கூட்டத்தில் நேரடியாகப் பங்கேற்காததும், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் இக்கூட்டம் பெரும் சலசலப்பையும் கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
கூட்டணித் தலைவர்களின் இந்த மனமாற்றத்திற்குப் பின்னால் கள நிலவரம் தவெகவிற்குச் சாதகமாக இல்லை என்ற உளவுத்துறை தகவல்களும், எதிர்தரப்பின் தீவிர களப்பணியால் எழுந்துள்ள படுதோல்வி பயமுமே முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. அதோடு, தவெக தலைமை கூட்டணிக் கட்சிகளைச் சரியாக அரவணைத்துச் செல்லவில்லை என்றும், களத்தில் தவெக நிர்வாகிகள் தங்களை மதிப்பதில்லை என்றும் கூட்டணித் தலைவர்கள் உள்ளூரக் குமுறுகின்றனர். தோல்வி ஏற்பட்டால் பழி தங்கள் மீது விழுமோ என்ற அச்சமும் அவர்களிடம் நிலவுகிறது.
தவெக கூட்டணிக்கு இந்த மதுராந்தகம் இடைத்தேர்தல் ஒரு வாழ்வா-சாவா போராட்டமாக மாறியுள்ள சூழலில், மேடையில் வெளிப்பட்ட தலைவர்களின் விரக்தி வரவிருக்கும் தேர்தல் முடிவுகள் குறித்த முன் எச்சரிக்கை மணி என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. கூட்டணிக் கட்சித் தலைவர்களின் முகவாட்டம் வெறும் உடல் சோர்வா அல்லது வரவிருக்கும் தோல்வியின் வெளிப்பாடா என்பது வாக்கு எண்ணிக்கையின் போது தெளிவாகத் தெரியும்.
உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…
டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…
மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…
தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…