முதல்வர் விஜய்க்கு களம் சாதகமாக இல்லை… 4 மாதத்திலேயே தவெக மீது மக்கள் அதிருப்தி… ஓபனாக உடைத்த சிபிஎம் சண்முகம்… அரசியலில் பரபரப்பு…!!

Spread the love

தமிழகத்தில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இரு தொகுதிகளிலும் முதல்வர் விஜய் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். ஏற்கனவே பிரச்சாரக் கூட்டங்களை முடித்துள்ள விஜய், மதுராந்தகத்தில் நகரப் பகுதிகள் மற்றும் 39 கிராமங்களை உள்ளடக்கி ரோடு ஷோ நடத்த ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கொளத்தூரில் ஸ்டாலின் 5 நிமிடங்கள் பேசியதற்கே அவர் தோற்றுவிட்டதாகக் கூறிய தவெகத் தலைவர் விஜய், தற்போது இந்த இடைத்தேர்தலுக்காக இவ்வளவு தூரம் உழைப்பது ஏன் என்ற கேள்வி அக்கட்சியினரிடையே எழுந்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், தவெகவுக்கு இந்தத் தேர்தலில் களம் சாதகமாக இல்லை என்று விமர்சித்துள்ளார். சட்டசபைத் தேர்தலின் போது முறையான திட்டமிட்ட பிரச்சாரம் இல்லாமலேயே தவெக வெற்றி பெற்றிருந்தாலும், இடைத்தேர்தலில் நிலைமை அவ்வாறு இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார். நீண்ட காலமாகவே இந்த இரு தொகுதிகளும் அதிமுகவுக்குச் சாதகமாக இருந்துள்ள நிலையில், அங்குத் திடீரென மாற்றம் ஏற்படும் என்று தவெக நம்பவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், தவெகவின் 4 மாத ஆட்சியில் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அதிருப்தியைச் சரிசெய்யவும், ஆளுங்கட்சியாக இருந்து தோற்றுவிடக் கூடாது என்ற கவுரவப் பிரச்சனைக்காகவுமே விஜய் இருமுறை ஒவ்வொரு தொகுதிக்கும் சென்று பிரச்சாரம் செய்வதாக அவர் கூறியுள்ளார். ஒட்டுமொத்த அமைச்சரவையும் தொகுதியிலேயே முகாமிட்டுள்ளதால் களம் சவாலாக உள்ளதாகவும், தவெக எளிதில் வெல்லக்கூடிய நிலையில் இல்லை என்றும் தெரிவித்த அவர், எந்தக் கட்சியாக இருந்தாலும் குறைந்த வாக்கு வித்தியாசத்திலேயே வெற்றி பெற முடியும் எனக் கூறியுள்ளார்.

Swetha

Recent Posts

எக்ஸ்பிரஸ்வேயில் கோர விபத்து… 2 பிள்ளைகளுடன் துடிதுடித்து இறந்த தம்பதி… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…

3 மணத்தியாலங்கள் ago

உங்களுக்கு மனசாட்சியே இல்லையா…? மறுப்பு சொன்ன பூ வியாபாரி பெண்… லத்தியால் சரமாரியாக தாக்கிய கும்பல்… நடுங்க வைக்கும் வீடியோ….!!

டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…

4 மணத்தியாலங்கள் ago

மின்னல் வேகத்தில் சென்ற வாகனம்…! 13 வயது சிறுமி துடிதுடித்து பலி… கதறும் குடும்பத்தினர்… வைரலாகும் திக் திக் வீடியோ…!!

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…

4 மணத்தியாலங்கள் ago

அரசு பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்…! மாதம் ரூ.1000 உதவித்தொகை பெற விண்ணப்பிப்பது எப்படி…? முழு விவரம் இதோ…!!

மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…

5 மணத்தியாலங்கள் ago

“பஞ்ச் டயலாக் பேசி காலத்தை ஓட்ட இது சினிமா அல்ல…” தீபாவளி பரிசு கொடுத்து வழியனுப்பி வைப்பதா…? முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்…!!

தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…

5 மணத்தியாலங்கள் ago

“முதல்வரே…! உங்க கட்சிக்காரர்களை கட்டி வையுங்கள்… இல்லை என்றால்…” தவெக அரசை கடுமையாக எச்சரித்த உதயநிதி ஸ்டாலின்…!!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…

5 மணத்தியாலங்கள் ago