அதிர்ச்சி..! கோவிலில் பற்றி எரிந்த தீ…! திடீரென கேட்ட அலறல் சத்தம்… இன்ஸ்டா காதலால் போன உயிர்… தீக்குளித்த 19 வயது பெண்…!!

Spread the love

புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலையைச் சேர்ந்த ராகுல் என்ற இளைஞருக்கும், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மகாலட்சுமி என்ற இளம் பெண்ணிற்கும் சமூக வலைத்தளம் வாயிலாக ஏற்பட்ட அறிமுகம் காதலாக மாறியது. சுமார் ஒரு வருடமாக இவர்கள் காதலித்து வந்த நிலையில், இதனை அறிந்த பெண்ணின் தந்தை ராகுலை கடுமையாக எச்சரித்ததுடன் காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளார். இதனால் பயந்துபோன ராகுல், கடந்த ஆறு மாதங்களாக மகாலட்சுமியுடனான தொடர்பை முழுமையாகத் துண்டித்துள்ளார்.

காதலனிடம் இருந்து எந்த தகவலும் வராததால் விரக்தியடைந்த மகாலட்சுமி, அவரை நேரில் தேடி குடுமியான்மலைப் பகுதிக்குச் சென்றுள்ளார். அங்குள்ள ஒரு கடைக்காரரிடம் ராகுல் குறித்து விசாரித்தபோது, அவர் வெளியூரில் தங்கிப் படித்து வருவதாகத் தகவல் கிடைத்துள்ளது. ராகுலை சந்திக்க முடியாத ஏமாற்றத்திலும், என்ன செய்வதென்று அறியாத மன உளைச்சலிலும் அந்தப் பெண் தவித்துள்ளார்.

இந்த விரக்தியின் உச்சத்தில், அங்கிருந்த சிவன் கோவில் வளாகத்திற்குச் சென்ற மகாலட்சுமி, தான் முன்னதாகவே பையில் மறைத்து எடுத்து வந்திருந்த மண்ணெண்ணெயை தன் மீது ஊற்றி தீக்குளித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அப்பகுதி மக்கள், பலத்த காயமடைந்த அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இருப்பினும், தீவிர சிகிச்சை பலனின்றி அந்த இளம் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Gayathri

Recent Posts

மெகா ட்விஸ்ட்!… வானத்திலிருந்து கொட்டிய பணமழை… ரூ.81,800 பணக்கட்டை பறித்து மரத்தில் ஏறிய குரங்கு… அள்ள முண்டியடித்த மக்கள்… வைரலாகும் வீடியோ…!!

சிம்லாவில் அமைந்துள்ள துணை ஆணையர் அலுவலக வளாகத்தில் எதிர்பாராத விதமாகத் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. வங்கியில் பணத்தைச் செலுத்துவதற்காக ஒருவர்…

5 மணத்தியாலங்கள் ago

அய்யயோ..! மனைவியை காணவில்லை என புகார்… பூட்டிய அறைக்குள் நடந்த மர்மம்… லாட்ஜ் அறையில் சடலமாக மீட்கப்பட்ட பெண்… பின்னணி என்ன?…!!

விஜயவாடா கிருஷ்ணலங்கா பகுதியில் உள்ள ராமையா தங்கும் விடுதி அறையில், பைடிசெட்டி எர்ரம்மா என்ற பெண் மர்மமான முறையில் கொலை…

5 மணத்தியாலங்கள் ago

வீடு புகுந்த மர்ம நபர்கள்… நொடியில் நகைகள் அபேஸ்… பெண்களை மயக்கமடைய செய்து துணிகர கொள்ளை… அரங்கேறிய திடுக்கிடும் சம்பவம்…!!

வாரங்கல் நகரின் கரிமாபாத் பகுதியில் பட்டப்பகலில் ஐயப்ப பக்தர்கள் போல் வேடமணிந்து வந்த இருவர், பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து…

5 மணத்தியாலங்கள் ago

இப்படியொரு பழிவாங்கலா?… வேடிக்கை பார்க்கிறதா காவல்துறை?… தாக்கி வீட்டு வாசலில் வீசப்பட்ட இளைஞர்… சிசிடிவியில் சிக்கிய கொடூர முகம்…!!

நவம்பர் 10-ம் தேதி குருகிராமில், முன்பகை காரணமாக நிதின் என்ற 25 வயது இளைஞர் கும்பல் ஒன்றால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…

5 மணத்தியாலங்கள் ago

இப்படியொரு நிலையா?… “அவை இல்லாமல் என்னால் வாழ முடியாது”… செல்ல பிராணிகளை பிரிந்து கதறி அழுத பாலிவுட் நடிகர்…!!

பாலிவுட் நடிகர் சரத் கபூர், தனது குடும்பத்தைப்போல வளர்த்து வந்த நான்கு செல்லப் பிராணிகளான நாய்களை மும்பையில் உள்ள விலங்குகள்…

5 மணத்தியாலங்கள் ago

திக்… திக்… சாதி மறுப்பு காதலால்… தீபாவளி இரவில் பெற்ற மகளை… துப்பட்டாவால் கழுத்தை நெரித்துக் கொன்ற தந்தை… குலை நடுங்கவைக்கும் அதிர்ச்சி சம்பவம்…!!

குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள மேட்பூர் கிராமத்தில், சாதி மறுப்பு காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 21 வயது மகளைத்…

5 மணத்தியாலங்கள் ago