“உன் பையனை கொன்னுட்டேன்டி”… தாயின் கள்ளக்காதல்… போனில் வந்த மிரட்டல்… பலியான 9 வயது சிறுவன்… கட்டிலுக்கு அடியில் நடந்த கொடூரம்…!!

Spread the love

சென்னை கோயம்பேடு நியூ காலனி பகுதியில் வசித்து வரும் 30 வயதான பூவரசி என்ற பெண், தனது கணவரைப் பிரிந்து ஒன்பது வயது மகனான தருணுடன் தனியாக வாழ்ந்து வந்தார். இவருடன் தமிழ்ச்செல்வன் என்ற நபரும் பழகி வந்துள்ளார்; இவர்கள் இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், பூவரசிக்கும் தமிழ்ச்செல்வனுக்கும் இடையே வேறு நபருடன் பேசுவது தொடர்பாக அடிக்கடி சிறுசிறு காரணங்களுக்காக குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

சம்பவத்தன்று இரவு கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே இருவருக்கும் இடையே மீண்டும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதன் பின்னர் ஆத்திரமடைந்து தனியாக வீட்டிற்குச் சென்ற தமிழ்ச்செல்வன், பூவரசியை செல்போனில் தொடர்புகொண்டு அவரது மகனைக் கொலை செய்யப் போவதாக மிரட்டியுள்ளார். சிறிது நேரம் கழித்து மீண்டும் அழைத்த அவர், 9 வயது சிறுவனின் கழுத்தை நெரித்துக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.

இதைக் கேட்டு பதறியடித்துக்கொண்டு உடனடியாக வீட்டிற்குச் சென்று பார்த்தபோது, சிறுவன் தருண் கொலை செய்யப்பட்டு கட்டிலுக்கு அடியில் சடலமாகக் கிடப்பதைக் கண்டு பூவரசி அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிஎம்பிடி காவல் துறையினர், சிறுவனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொடூர சம்பவத்தை அரங்கேற்றிவிட்டு தலைமறைவாகியுள்ள தமிழ்ச்செல்வனைப் பிடிக்க காவல்துறையினர் தனிப்படை அமைத்து தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Gayathri

Recent Posts

எக்ஸ்பிரஸ்வேயில் கோர விபத்து… 2 பிள்ளைகளுடன் துடிதுடித்து இறந்த தம்பதி… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…

3 மணத்தியாலங்கள் ago

உங்களுக்கு மனசாட்சியே இல்லையா…? மறுப்பு சொன்ன பூ வியாபாரி பெண்… லத்தியால் சரமாரியாக தாக்கிய கும்பல்… நடுங்க வைக்கும் வீடியோ….!!

டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…

4 மணத்தியாலங்கள் ago

மின்னல் வேகத்தில் சென்ற வாகனம்…! 13 வயது சிறுமி துடிதுடித்து பலி… கதறும் குடும்பத்தினர்… வைரலாகும் திக் திக் வீடியோ…!!

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…

5 மணத்தியாலங்கள் ago

அரசு பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்…! மாதம் ரூ.1000 உதவித்தொகை பெற விண்ணப்பிப்பது எப்படி…? முழு விவரம் இதோ…!!

மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…

5 மணத்தியாலங்கள் ago

“பஞ்ச் டயலாக் பேசி காலத்தை ஓட்ட இது சினிமா அல்ல…” தீபாவளி பரிசு கொடுத்து வழியனுப்பி வைப்பதா…? முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்…!!

தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…

5 மணத்தியாலங்கள் ago

“முதல்வரே…! உங்க கட்சிக்காரர்களை கட்டி வையுங்கள்… இல்லை என்றால்…” தவெக அரசை கடுமையாக எச்சரித்த உதயநிதி ஸ்டாலின்…!!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…

5 மணத்தியாலங்கள் ago