FLASH NEWS: தவெக மாநாடு… பள்ளி, கல்லூரிகளுக்கு சற்றுமுன் விடுமுறை அறிவிப்பு…!

By Nanthini on ஆவணி 20, 2025

Spread the love

மதுரையில் வருகின்ற ஆகஸ்ட் 21ஆம் தேதி பிரம்மாண்டமாக நடைபெற உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டுக்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இரண்டு நாட்களுக்கு முன்பாகவே விஜய் மதுரைக்கு சென்று விட்டார்.

இந்நிலையில் மாநாட்டை முன்னிட்டு மதுரை மாவட்டம் எலியார்பத்தி, வளையங்குளம், காரியாபட்டி ஆகிய பகுதிகளில் உள்ள தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை மற்றும் தூத்துக்குடி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள அரசு பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.