பிரதமர், முதல்வர் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்ட 30 நாட்கள் வரை சிறையில் இருந்தால் அவர்களை பதவி நீக்கம் செய்யும் மசோதாவை லோக்சபாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார். மத்திய அரசின் இந்த மசோதா ஜனநாயகத்திற்கு எதிரானது என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டுள்ளனர்.
