இந்த மனசு எத்தனை பேருக்கு வரும்…? சாலை விபத்தில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு உதவி செய்த TVET சீரியல் நடிகர்…! அவரே வெளியிட்ட வீடியோ..!

By Begam on ஐப்பசி 2, 2023

Spread the love

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட் சீரியல் ஒன்று தான் ‘தென்றல் வந்து என்னை தொடும்’. இந்த சீரியல் ஒளிபரப்பாகிய சிறிது நாட்களிலேயே தனக்கான ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டது. இந்த சீரியலில் கதாநாயகியாக அபி என்ற கதாபாத்திரத்தில் நடிப்பவர்  நடிகை பவித்ரா.  கதாநாயகனாக வெற்றி என்ற கதாபாத்திரத்தில் நடிப்பவர் நடிகர்  வினோத் பாபு. இவர் ஆதித்யா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய காமெடி ஷோக்களின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார்.

   

இதை  தொடர்ந்து  விஜய் டிவியில் சூப்பர் ஹிட் ஆக ஒலிபரப்பான நிகழ்ச்சி ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பைனல்ஸ் வரை சென்றார். இதன் பிறகு இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் ஹிட் சீரியல் ஆன ‘சுந்தரி நீயும் சுந்தரன் நானும்’ என்ற சீரியலில் கதாநாயகனாக அறிமுகமாகி மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றார்.

   

 

இவர் தற்போது ‘தென்றல் வந்து என்னை தொடும்’ என்ற சீரியலில் கதாநாயகனாக நடித்து வருகிறார். சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகர் வினோத் பாபு. இவர் தற்பொழுது சாலை விபத்தில் உயிரிழந்த கீர்த்தி என்ற பெண்ணின் குடும்பத்திற்கு சோசியல் மீடியா மூலமாக பலர் செய்த உதவியின் மூலம் ரூ . 2 லட்சம் உதவித்தொகையாக கொடுத்துள்ளார். இதனை அவரே தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட ரசிகர்கள் அவரின் இந்த செயலை பாராட்டி வருகின்றனர். இதோ அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by Vinothbabu M (@vinothbabu_m)