ஆள் நடமாட்டமில்லாத காடு.. 3 இளைஞர்களுடன் பள்ளி மாணவி…. ஊர்மக்கள் பார்த்த ‘அந்த’ காட்சி…. நடுக்காட்டில் நடந்த உச்சக்கட்ட கொடூர சம்பவம்…!

By Nanthini on ஆனி 20, 2026

Spread the love

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே, காதல் என்ற பெயரில் பிளஸ்-2 மாணவி ஒருவரை ஏமாற்றி, காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று தனது நண்பர்களுக்கு விருந்தாக்க முயன்ற பெயிண்டர் உட்பட மூன்று இளைஞர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆத்திக்காடு பகுதியைச் சேர்ந்த சஞ்சய் (20) என்ற பெயிண்டர், பிளஸ்-2 படிக்கும் பள்ளி மாணவி ஒருவரை காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி பழகி வந்துள்ளார். சம்பவத்தன்று, அந்த மாணவியை தனது மோட்டார் சைக்கிளில் அழைத்துக் கொண்டு ஆத்திக்காடு கருமேனி ஆற்றங்கரை மற்றும் அதன் அருகிலுள்ள காட்டுப் பகுதிக்கு சஞ்சய் சென்றுள்ளார். மாணவிக்குத் தெரியாமல், தனது நண்பர்களான உபேஷ் தர்மா (21) மற்றும் முத்தரசன் (18) ஆகிய இருவரையும் செல்போன் மூலம் அதே காட்டுப் பகுதிக்கு சஞ்சய் வரவழைத்துள்ளார்.

   

காட்டுப் பகுதியில் மூன்று இளைஞர்களுடன் மாணவி தனியாக இருப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள், சந்தேகமடைந்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போதுதான், சஞ்சய் அந்த மாணவியைத் தவறான எண்ணத்துடன் அழைத்து வந்ததும், தன் நண்பர்களுக்கும் அவளை விருந்தாக்க திட்டமிட்டிருந்ததும் அம்பலமானது. சற்றும் தாமதிக்காத பொதுமக்கள், மூன்று இளைஞர்களையும் மாணவியையும் மீட்டு மெஞ்ஞானபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

   

இதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் சாத்தான்குளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், சஞ்சய், உபேஷ் மற்றும் முத்தரசன் ஆகிய மூன்று பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர்கள் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர். உரிய நேரத்தில் செயல்பட்டு தங்கள் மகளின் வாழ்க்கையைக் காப்பாற்றிய ஊர்மக்களுக்கு, பெற்றோர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.