திருப்பூரில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்பொழுது தமிழக சட்டமன்ற தேர்தலில் நான்கு முனை போட்டி நிலவ வாய்ப்பு இருக்கிறது. தமிழக வெற்றி கழகம் தங்களுடைய தலைமையில் புதிய அணியை வலுவாக கட்டமைக்க முயற்சி செய்து வருகிறது. ஏற்கனவே வலுவாக உள்ள திமுக, NDA கூட்டணியில் உள்ள சில கட்சிகளுடனும் TVK கூட்டணிக்காக பேசி வருகிறது.
TVK தலைமையில் ஒருவேளை கூட்டணி அமைந்தால் NDA கூட்டணி மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட வாய்ப்புள்ளது. எடப்பாடி பழனிச்சாமி மீது தனிப்பட்ட வருத்தத்தால் இதை சொல்லவில்லை. எதார்த்தத்தில் சொல்கிறேன். திமுகவை உண்மையிலேயே வீழ்த்த வேண்டும் என்று நினைக்கும் கட்சிகள் தங்களை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அப்போதுதான் மிருக பலத்தோடு ஆட்சி அதிகாரத்தோடு இருக்கிற திமுகவை வீழ்த்த முடியும் என்று கூறியுள்ளார்.
