அதிமுக ஆட்சியை காப்பாற்றியது மத்தியில் ஆட்சியில் இருந்த பாஜக தான். அந்த நன்றியை தான் எப்போதும் மறக்க மாட்டேன். ஆட்சியை காப்பாற்றிக் கொடுத்தது பாஜக என்பது புரிகிறது என்று நேற்று EPS கூறியிருந்தார். இந்த நிலையில் எடப்பாடியின் பேச்சுக்கு டிடிவி தினகரன் பதிலடி கொடுத்துள்ளார். அதில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக ஆட்சியை காப்பாற்றியது 122 எம்எல்ஏக்கள் தவிர பாஜக அல்ல.
கூவத்தூரில் எம்எல்ஏக்கள் தங்க வைக்கப்பட்டு வாக்களித்ததால் தான் பழனிச்சாமி முதல்வர் ஆனார். ஆனால் தற்போது அப்பட்டமாக பொய் பேசி வருகிறார். துரோகத்தை தவிர வேறு எதுவும் தெரியாத பழனிச்சாமி நன்றியை பற்றி பேசுகிறார் .ஆட்சியை காப்பாற்றிய 18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்தவர்தான் எடப்பாடி பழனிச்சாமி என்று கூறியுள்ளார். மேலும் மேலும் எடப்பாடி பழனிசாமியிடன் கூட்டணிக்கு போவதற்குப் பதில் தூக்கில் தொங்கிடலாம்” என்று கூறியுள்ளார்.
