BREAKING: திடீர் திருப்பம்… சற்றுமுன் கூட்டணி முடிவை வெளியிட்ட டிடிவி தினகரன்….!

By Nanthini on புரட்டாதி 16, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதேசமயம் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையும் ஒரு பக்கம் மும்முறமாக நடந்து கொண்டிருக்கிறது. இதனிடையே டெல்லி பாஜக தலைமை எல்லாத்தையும் சரி செய்து விடும் என்று யாரும் பகல் கனவு காண வேண்டாம், கூட்டணிக்கு அழைத்தாலும் இனி போக மாட்டேன் என்றே டிடிவி தினகரன் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

விஜய் மற்றும் தனியாக போட்டியிட்டு வந்த சீமானும் இந்த முறை கூட்டணி அமைக்கும் முயற்சியில் இருப்பது எனக்கு தெரியும் என சூசகமாகவும் தெரிவித்துள்ளார். இதனால் தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் விஜய் அல்லது சீமானுடன் கூட்டணி அமைத்து டிடிவி தினகரன் போட்டியிடலாம் என கூறப்படுகிறது. சமீபத்தில் டிடிவி தினகரன் NDA கூட்டணியில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.