“டிடிவி தினகரனால் அதிமுகவுக்கு நேர்ந்த கதி… உண்மையை உடைத்த மாணிக்கம் தாகூர்”… செம ஷாக்கில் இபிஎஸ்…. அரசியலில் அடுத்த பரபரப்பு….!

By Nanthini on ஆடி 15, 2026

Spread the love

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக மதுரைக்கு வருகை தந்த மாணிக்கம் தாகூருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தனக்கு இப்பொறுப்பை வழங்கிய மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தி ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார். பல தசாப்தங்களுக்குப் பிறகு தமிழக ஆட்சியில் காங்கிரஸ் பங்கு பெற்றுள்ளதைக் குறிப்பிட்ட அவர், இரண்டு அமைச்சர்களுடன் கட்சியின் பயணம் ஓய்ந்துவிடாது என்றும், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ராகுல் காந்தியைப் பிரதமராக்குவதே காங்கிரஸின் ஒற்றை நோக்கம் என்றும், முதலமைச்சர் விஜய்யின் அரசியல் ஒவ்வொரு தமிழருக்குமானது என்றும் பெருமிதத்துடன் கூறினார்.

அதிமுகவின் தற்போதைய அரசியல் நிலை குறித்துப் பேசிய மாணிக்கம் தாகூர், டிடிவி தினகரனை மிகக் கடுமையாக விமர்சித்தார். டிடிவி தினகரன் அதிமுகவை ஒன்றும் இல்லாமல் ஆக்கும் வேலையில்தான் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார் என்று குற்றம் சாட்டினார். இதே அக்கறையை அவர் அதிமுகவை ஒருங்கிணைப்பதில் காட்டியிருந்தால், எம்ஜிஆர் தொடங்கி ஜெயலலிதா வரை பாடுபட்டுக் காப்பாற்றிய ஒரு இயக்கம் இன்று இந்த அவல நிலைக்கு வந்திருக்காது என்றும், அதிமுகவை அழிவுப் பாதைக்கு அழைத்துச் சென்றதே அவர்தான் என்றும் சாடினார்.

   

மேலும், அதிமுகவினர் முதலில் தங்கள் கட்சியை ஒருங்கிணைக்கும் வேலையைப் பார்க்க வேண்டும் என்றும், அதன் பிறகே திமுகவுடன் இணைவது குறித்துப் பேச வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார். அதிமுக சிதறுவதற்குக் காரணமானவர் தினகரன் தான் என்று சுட்டிக்காட்டிய அவர், தொண்டர்கள் உருவாக்கிய ஒரு பெரிய இயக்கம் இன்று தலைமைப் போட்டியாலும், தனி நபர் சுயநலத்தாலும் சீரழிந்து கொண்டிருப்பதை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்று தனது பேட்டியில் குறிப்பிட்டார்.

   

மறுபுறம் மத்திய அரசையும், பாஜகவையும் சாடிய அவர், அயோத்தி ராமர் கோவில் உண்டியலிலேயே பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் கைவைத்துவிட்டதாகக் பரபரப்புக் குற்றச்சாட்டை முன்வைத்தார். இக்கோவில் திருட்டு விவகாரம் குறித்துப் பிரதமர் மோடி இதுவரை வாய் திறக்காமல் மௌனம் காப்பது ஏன் என்று கேள்வி எழுப்பிய மாணிக்கம் தாகூர், தமிழகத்தில் பாஜாக தோற்ற வெறுப்பில் மத்திய அரசு மாநிலத்தைப் பழிவாங்கக் கூடாது என்றும், ராமர் கோவில் பண மோசடி மற்றும் மேகதாது அணை விவகாரங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் நிச்சயம் வலுவாகக் குரல் எழுப்பும் என்றும் கூறி முடித்தார்.