அதிரடித் திருப்பம்..! “EPS-ஐ முதல்வர் ஆக்குங்கள்” ஆளுநரை சந்தித்து ஆதரவு தெரிவித்த டிடிவி தினகரன்..!!

By Soundarya on வைகாசி 9, 2026

Spread the love

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் (அ.ம.மு.க) பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் புதிய அரசு அமையத் தனது முழு ஆதரவைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாகத் தமிழக ஆளுநருக்கு அவர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், எடப்பாடி பழனிசாமியை ஆட்சி அமைக்க அழைக்குமாறு அவர் ஆளுநரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மன்னார்குடி தொகுதியில் (167) வெற்றி பெற்ற அ.ம.மு.க வேட்பாளர் எஸ். காமராஜ், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவளிக்கும் இந்தக் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளார். டிடிவி தினகரன், எம்.எல்.ஏ காமராஜுடன் நேரில் சென்று ஆளுநரைச் சந்தித்து இந்த ஆதரவுக் கடிதத்தை வழங்கியுள்ளார். இதன் மூலம் அதிமுக தலைமையிலான ஆட்சி அமைவதற்கு அ.ம.மு.க தனது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளது.