பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) டிடிவி தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (AMMK) மீண்டும் இணைந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, வரவிருக்கும் தேர்தல்களை எதிர்கொள்ளும் வகையில் இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. தமிழக அரசியலில் நிலவும் தற்போதைய சூழலில், பலமான கூட்டணியை அமைப்பதன் மூலம் வாக்குகளை ஒருங்கிணைக்கவும், ஆளுங்கட்சிக்கு எதிராக ஒரு வலுவான மாற்று சக்தியை உருவாக்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சியை மீண்டும் கொண்டு வருவதற்காக NDA கூட்டணியில் இணைந்துள்ளதாக TTV தினகரன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மேலும் அமமுகவிற்கு மட்டும் அல்ல, TN-க்கே இது நற்செய்தி என்றும், மக்கள் விரும்பும் நல்லாட்சியை உருவாக்கவே இந்த கூட்டணி எனவும் தெரிவித்துள்ளார். அத்துடன் அதிமுகவுடன் இருப்பது பங்காளி சண்டை மட்டுமே என்றவர், விட்டுக்கொடுப்பவர் கெட்டுபோவதில்லை எனவும் பஞ்ச் பேசியுள்ளார்.
இந்த இணைப்பின் மூலம் தேசிய அரசியலில் பிரதமர் மோடியின் கரங்களை வலுப்படுத்தப் போவதாக டிடிவி தினகரன் தனது ஆதரவாளர்களிடையே தெரிவித்துள்ளார். ஏற்கனவே கடந்த காலங்களில் பாஜகவுடன் சில கருத்து வேறுபாடுகள் நிலவி வந்த நிலையில், தற்போது தேச நலன் மற்றும் மாநிலத்தின் வளர்ச்சியை முன்னிறுத்தி மீண்டும் கைகோர்த்திருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த அதிரடி மாற்றமானது தமிழகத்தில் உள்ள மற்ற திராவிடக் கட்சிகளுக்கு சவாலாக அமையும் என்றும், குறிப்பாக தென் மாவட்டங்களில் இந்தக் கூட்டணி கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
