உலகையே அதிரவைத்த டிரம்ப்பின் உத்தரவு… இந்தியாவுக்கு வரப்போகும் மிகப்பெரிய ஆபத்து… காலையிலேயே ஷாக் நியூஸ்…!

By Nanthini on சித்திரை 13, 2026

Spread the love

அமெரிக்க அதிபர் டிரம்ப் ஹார்முஸ் நீரிணையை முற்றுகையிட அந்நாட்டு ராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளது உலகளாவிய எரிசக்தி சந்தையில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகின் மிக முக்கியமான கடல்வழி வர்த்தகப் பாதையான இப்பகுதி வழியாகவே இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் மற்றும் எல்பிஜி (LPG) விநியோகத்தின் பெரும்பகுதி நடைபெறுகிறது.

இதுவரை ஈரானின் ஒத்துழைப்போடு இந்தியக் கப்பல்கள் சுமூகமாக இப்பகுதியைக் கடந்து வந்த நிலையில், டிரம்பின் இந்த அதிரடி நடவடிக்கையால் அனைத்துக் கப்பல்களும் தடுத்து நிறுத்தப்பட்டால், இந்தியாவின் எரிசக்திப் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் அபாயம் உள்ளது. கச்சா எண்ணெய் தட்டுப்பாடு மற்றும் எரிவாயு விலை உயர்வு போன்றவை இந்தியப் பொருளாதாரத்தில் நேரடி பாதிப்பை ஏற்படுத்தும் எனப் பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.