“நாங்கள் கடற்கொள்ளையர்கள்” கடலில் நடக்கும் ‘கல்லா’ கட்டும் பிசினஸ்.. ஈரானியக் கப்பல்களைச் சுருட்டும் அமெரிக்கா.. ட்ரம்ப் பகீர் தகவல்..!!

By Soundarya on வைகாசி 3, 2026

Spread the love

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரான் மீதான கடல்சார் பொருளாதாரத் தடைகளை அமல்படுத்துவதில் அமெரிக்கப் படைகள் செயல்படும் விதத்தை “கடற்கொள்ளையர்களைப்” (Pirates) போன்றது என்று வர்ணித்துப் பேசியிருப்பது சர்வதேச அளவில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் நாட்டு நவுக்காய்களைக் கைப்பற்றி, அதிலுள்ள கச்சா எண்ணெய் மற்றும் இதர பொருட்களை அமெரிக்கா கையகப்படுத்துவது மிகவும் லாபகரமான ஒரு வணிகம் என்றும், இதில் தாங்கள் மிகவும் தீவிரமாக இருப்பதாகவும் அவர் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.

ஈரான் மீதான இந்தத் தடையின் காரணமாக அந்த நாட்டுக்கு சுமார் 4.8 பில்லியன் டாலர் (சுமார் ₹45,000 கோடி) இழப்பு ஏற்பட்டுள்ளதாக பெண்டகன் மதிப்பிட்டுள்ளது. இதுவரை 40-க்கும் மேற்பட்ட நவுக்காய்களை அமெரிக்கப் படைகள் தடுத்து நிறுத்தியுள்ள நிலையில், உலக நாடுகளுக்கு இடையே நிலவும் இராஜதந்திர உறவுகளுக்கு மத்தியில் ட்ரம்பின் இத்தகைய “கடற்கொள்ளையர்” என்ற ஒப்பீடு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.