நாட்டையே உலுக்கிய “தாய்-மகன்” புகைப்படம்… யார் செய்த் வேலை இது..? உருக வைக்கும் படத்தின் பின்னணியில் இருக்கும் உண்மை.. கலெக்டர் பகீர் விளக்கம்..!!

By Soundarya on வைகாசி 3, 2026

Spread the love

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் அருகே உள்ள பார்கி அணைப் பகுதியில் நேரிட்ட படகு விபத்தின் பின்னணியில், சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் தாய் மற்றும் மகனின் உருக்கமான புகைப்படம் முற்றிலும் போலியானது என்று மாவட்ட நிர்வாகம் அதிரடி விளக்கம் அளித்துள்ளது. ஒரு பெண் தனது குழந்தையை இறுக்கமாகக் கட்டிப்பிடித்தபடி தண்ணீரில் மிதப்பது போன்ற அந்தப் படம், விபத்தில் உயிரிழந்தவர்களின் கடைசி தருணம் எனக்கூறி வாட்ஸ்அப் மற்றும் முகநூலில் வேகமாகப் பரவியது.

இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்துள்ள ஜபல்பூர் மாவட்ட ஆட்சியர், வைரலாகும் அந்தப் புகைப்படம் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டிருக்கலாம் அல்லது வேறு ஏதோ ஒரு இடத்தில் எடுக்கப்பட்ட பழைய படமாக இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார். பார்கி அணை படகு விபத்திற்கும் இந்த படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், சோகமான நேரங்களில் இத்தகைய தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம் என்றும் அவர் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

   

உண்மையில், இந்த விபத்தின்போது மெரினா மேஸி என்ற தாய் தனது 4 வயது மகன் திரிஷானை காப்பாற்ற போராடி, இறுதியில் இருவரும் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்த நிலையிலேயே உயிரிழந்தது மீட்புப் பணியாளர்களைக் கண்கலங்க வைத்தது. இந்த உண்மையான சம்பவத்தோடு, ஏஐ (AI) மூலம் உருவாக்கப்பட்ட போலியான படத்தை இணைத்துத் தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாகத் தெரியவந்துள்ளது.