அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மயாமி பீச்சில் நடைபெற்ற ‘FII Priority’ முதலீட்டாளர் மாநாட்டில் ஆற்றிய உரை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாநாட்டில் உலகளாவிய முதலீடுகள், பொருளாதார வளர்ச்சி மற்றும் ஈரான் உடனான போர் குறித்து உரையாற்றிய பின்னர், கேள்வி-பதில் அமர்வின் போது அவர் இந்தப் பேச்சைப் பகிர்ந்துள்ளார்.
மற்ற அரசியல்வாதிகளைப் போலத் தான் கேள்விகளை முன்கூட்டியே சரிபார்ப்பதில்லை என்று குறிப்பிட்ட டிரம்ப், “நீங்கள் என்னிடம் எது வேண்டுமானாலும் கேட்கலாம், நீங்கள் செக்ஸ் (Sex) பற்றியும் பேசலாம், நீங்கள் எதை வேண்டுமானாலும் செய்யலாம், நான் உங்களுக்காக இங்கே இருக்கிறேன்” என்று பேசியுள்ளார். மார்ச் 27, 2026 அன்று நடைபெற்ற இந்த நிகழ்வில், நாட்டின் உயரிய பதவியில் இருப்பவர் பொது மேடையில் இத்தகைய கருத்துக்களைத் தெரிவித்திருப்பது சமூக வலைதளங்களில் விவாதங்களைக் கிளப்பியுள்ளது.
