உலகமே எதிர்பார்த்த அந்த ஒரு கையெழுத்து…. அமெரிக்கா எடுத்த அதிரடி முடிவு…. அதிபர் ட்ரம்ப் போட்ட ஒரே ஒரு உத்தரவு… பதறும் நாடுகள்….!

Spread the love

ஈரான் நாட்டின் துறைமுகங்கள் மற்றும் கடற்கரைப் பகுதிகளில் அமெரிக்கா விதித்திருந்த கடுமையான கடல்வழித் முற்றுகை தற்போது அதிகாரப்பூர்வமாக நீக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் நேரடி உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் அமைதி ஒப்பந்தத்தைத் தொடர்ந்து அமெரிக்கா இந்த முக்கிய முடிவை எடுத்துள்ளது.

ஈரானின் பொருளாதாரத்தை முடக்கும் நோக்கில், அந்நாட்டின் முக்கிய வாழ்வாதாரமான கச்சா எண்ணெய் ஏற்றுமதியை குறிவைத்து அமெரிக்கா இந்த முற்றுகையை நடத்தியது. குறிப்பாக, உலக வர்த்தகத்தின் முக்கிய வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தியைச் சுற்றி அமெரிக்கப் படைகள் குவிக்கப்பட்டு, எந்தவொரு வணிகக் கப்பலும் ஈரானுக்குச் செல்ல முடியாதபடி முடக்கப்பட்டது. இந்த மறைமுக அழுத்தங்களால் பிராந்தியத்தில் போர் பதற்றம் உச்சமடைந்திருந்த நிலையில், தற்போது கையெழுத்தாகியுள்ள அமைதி ஒப்பந்தம் அங்கு நிலமையை சீராக்கத் தொடங்கியுள்ளது.

இந்தத் தடை நீக்கத்தின் மூலம், ஈரான் துறைமுகங்களுக்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து வெளியேறும் வணிகக் கப்பல்களை அமெரிக்கப் படைகள் இனிமேல் மறிக்காது. சர்வதேச கடல் வழித்தடங்களில் பயணம் செய்யும் வணிக நிறுவனங்களுக்கு இது பெரும் நிம்மதியை அளித்துள்ளதுடன், உலகளாவிய கப்பல் போக்குவரத்து மற்றும் வர்த்தகம் சீராகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதிபர் ட்ரம்ப்பின் அமைதி முயற்சியின் ஒரு பகுதியாக, தடையை அமல்படுத்துவதற்காகப் பயன்படுத்தப்பட்ட அமெரிக்கக் கடற்படையின் தடுப்பு நடவடிக்கைகள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளன.

இருப்பினும், அமெரிக்கப் படைகள் மத்திய கிழக்கு கடல் பிராந்தியத்தில் இருந்து முழுமையாக வெளியேறப் போவதில்லை என்று CENTCOM தெளிவுபடுத்தியுள்ளது. தடை நீக்கப்பட்ட பிறகும், அமெரிக்க கடற்படைக் கப்பல்கள் அதே பகுதியில் தொடர்ந்து நிலைநிறுத்தப்பட்டிருக்கும். ஈரானுடனான புதிய அமைதி ஒப்பந்தத்தின் விதிகள் மற்றும் நிபந்தனைகள் சரியாகப் பின்பற்றப்படுகிறதா என்பதைக் கண்காணிக்கும் பணியில் இப்படை தொடர்ந்து ஈடுபடும். பேச்சுவார்த்தை மூலம் பதற்றத்தைக் குறைத்து அமைதியை நிலைநாட்ட எடுக்கப்பட்டுள்ள இந்த முதல் ராணுவ நடவடிக்கை, சர்வதேச அரசியலில் ஒரு முக்கிய திருப்பமாகக் கருதப்படுகிறது.

Nanthini

Recent Posts

“அந்த சிரிப்பை பாருங்க…” மாற்றுத்திறனாளியின் தன்னம்பிக்கையை கண்டு வியந்துபோன நெட்டிசன்கள்… இணையத்தில் தீயாய் பரவும் நெகிழ்ச்சி வீடியோ…!!

மும்பை வீதிகளில் மோட்டார் பொருத்தப்பட்ட சக்கர நாற்காலியில் அமர்ந்துகொண்டு, எவ்விதச் சோர்வுமின்றி உற்சாகமாகச் சொமேட்டோ உணவு விநியோகம் செய்துவரும் மாற்றுத்திறனாளி…

37 minutes ago

“ஆண் என்பதால் வேலை கொடுக்கல…” ராபிடோ ஆட்டோ ஓட்டி கொண்டே கனவை அடைய போராடும் வாலிபர்… பயணியால் வெளிச்சத்திற்கு வந்த சோகம்… வைரலாகும் வீடியோ…!!

உத்தரப் பிரதேசத்தில் ஆசிரியர் வேலை கிடைக்காததால் ராபிடோ ஆட்டோ ஓட்டிக்கொண்டே போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வரும் இளைஞரின் வீடியோ சமூக…

50 minutes ago

“வெள்ளைக்கார பாஸை கவர இப்படியா…?” உற்சாகமாக டான்ஸ் ஆடிய பெண்… இணையத்தில் கிளம்பிய விவாதம்… வைரலாகும் வீடியோ…!!

கார்ப்பரேட் அலுவலகத்தில் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடும் விதமாக வெளிநாட்டுப் பெண் அதிபர் முன்னிலையில் பெண் ஊழியர் ஒருவர் உற்சாகமாக நடனமாடிய…

58 minutes ago

மீண்டும் குழப்பமா?… சுப்ரீம் கோர்ட்டுக்கு போன தர்கா நிர்வாகம்… மலை உச்சி தீப விவகாரம் மீண்டும் வெடித்தது… உச்ச நீதிமன்றம் எடுக்கும் அதிரடி முடிவு என்ன…!!

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள கல் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு அனுமதி வழங்கி சென்னை உயர் நீதிமன்ற…

1 மணத்தியாலம் ago