தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் அக்ஷய பிரியாவின் திருமண விழா, ஜூன் 18 அன்று மாலை சென்னை பல்லாவரம் 200 அடி சாலையில் உள்ள புது வாழ்வு கொண்டாட்ட மையத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. அரசியல் எல்லைகளைக் கடந்து பல்வேறு கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் சங்கமித்த இந்த விழா, தமிழக அரசியல் களத்தில் ஒரு முக்கிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. விழாவிற்கு வருகை தந்த அரசியல் பிரமுகர்கள் மற்றும் முக்கிய ஆளுமைகளை செல்வப்பெருந்தகை தனது மனைவியுடன் இணைந்து இன்முகத்தோடு வரவேற்றார்.
இந்தத் திருமண விழாவில் திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் நேரில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். அவருடன் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, டி.ஆர்.பாலு எம்பி, மற்றும் முன்னாள் அமைச்சர்களான நேரு, எ.வ.வேலு, சேகர்பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர். மணமக்களிடம் மாலைகளைக் கொடுத்து மாற்றச் சொல்லி வாழ்த்திய ஸ்டாலின், தொடர்ந்து புகைப்படம் எடுத்த போது, அருகில் நின்ற செல்வப்பெருந்தகையை அழைத்துத் தனது பக்கத்தில் அமர வைத்தார். பின்னர், ஸ்டாலினின் கைகளைப் பிடித்துக்கொண்டு செல்வப்பெருந்தகை அவரை உணவருந்த அழைத்துச் சென்ற நிகழ்வு அங்கிருந்தவர்களின் கவனத்தை ஈர்த்தது.
அரசியல் மாச்சரியங்களைத் தாண்டி அனைத்துக் கட்சித் தலைவர்களும் இவ்விழாவில் பங்கேற்று மணமக்களுக்குத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர். தேமுதிக பொதுச்செயலாளரும் எம்எல்ஏவுமான பிரேமலதா விஜயகாந்த், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணை அமைச்சர் எல். முருகன், சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி ஆகியோர் நேரில் வந்து வாழ்த்தினர். மேலும், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், பாமக தலைவர் ஜி.கே. மணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் முத்தரசன் மற்றும் காங்கிரஸ் முன்னாள் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி ஆகியோரும் இவ்விழாவில் கலந்துகொண்டனர்.
இவர்களுடன் முன்னாள் அமைச்சர்கள் அன்பில் மகேஷ், செந்தில் பாலாஜி, அமைச்சர் ஸ்ரீநாத், திமுக எம்பி கலாநிதி வீராசாமி, ஜோதிமணி எம்பி ஆகியோரும், கல்வி மற்றும் கலைத்துறையைச் சேர்ந்த வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் ஐசரி கணேஷ், விஐடி பல்கலைக்கழக வேந்தர் விஸ்வநாதன், நடிகர் மன்சூர் அலிகான் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்களும் திரளாக வந்து மணமக்களை வாழ்த்தினர். எந்தவித அரசியல் கலப்பும் இன்றி, காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் திமுக மற்றும் இதர கட்சித் தலைவர்களுடன் சிரித்துப் பேசி மகிழ்ந்த இந்தத் திருமண விழா, ஒரு சுமுகமான நட்புச் சூழலில் நிறைவுற்றது.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் பணி நிமித்தமாகக் காவலாளி ஒருவர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, அதிவேகமாக வந்த லாரி மோதிப் பரிதாபமாக…
சென்னை நீலாங்கரை, கபாலீஸ்வரர் நகர் தெற்கு 4-வது மெயின் ரோடு பகுதியில், பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம்…
வடகொரியா தனது வான் எல்லை பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் நோக்கில், மனித உதவியின்றி இலக்குகளைத் தானாகவே துல்லியமாகக் கண்டறிந்து தாக்கும்…
அமெரிக்காவில் கால்பந்து போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற ராணுவ வான்வழி சாகசத்தின் போது ஹெலிகாப்டர் மிக அருகில் பட்டாசுகள் வெடித்துச் சிதறிய…
மத்தியப் பிரதேசத்தில் மாசடைந்த அஜ்னார் நதியைத் தொடர்ச்சியாகச் சுத்தம் செய்து வந்த பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலர் பிட்டு தபாஹி, நச்சுநீரால்…
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் உயர்கல்வித்துறையில் நடந்தாகக் கூறப்படும் நிதி மற்றும் நிர்வாக முறைகேடுகள் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும்…