அமெரிக்காவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்… ஈரானுக்கு அடுத்து இந்த நாடு தான் குறி… உலக நாடுகளுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த டிரம்ப்..!!

By Soundarya on பங்குனி 17, 2026

Spread the love

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், கியூபா தீவை “வசப்படுத்துவது” குறித்துப் பேசியுள்ள கருத்து சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மார்ச் 16, 2026 அன்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கியூபாவை விடுவித்தாலும் சரி அல்லது கைப்பற்றினாலும் சரி, அந்தத் தீவை வைத்துத் தம்மால் எதை வேண்டுமானாலும் செய்ய முடியும் என்று தெரிவித்துள்ளார். கியூபா ஒரு அழகான தீவு என்றும், அதன் சிறந்த வானிலை காரணமாக அதை வசப்படுத்தும் கௌரவம் தமக்குக் கிடைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் மின் தட்டுப்பாட்டில் சிக்கித் தவிக்கும் கியூபா, ஒரு பலவீனமான நாடாக உள்ளதாக ட்ரம்ப் சாடியுள்ளார். ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்கா கவனம் செலுத்தி வரும் நிலையில், அதற்கு அடுத்தபடியாகக் கியூபா விவகாரத்தைக் கையில் எடுக்கப் போவதாக அவர் மறைமுகமாக எச்சரித்துள்ளார். அமெரிக்காவின் இந்தத் தீவிர வெளியுறவுக் கொள்கை மாற்றங்கள் மற்றும் கியூபா மீதான மிரட்டல் தொனி, உலக நாடுகளிடையே விவாதத்தையும் கவலையையும் தூண்டியுள்ளது.