ஜெயிக்க வச்சா ரூ.4.25 லட்சம் தரும் ‘Trump Stimulus’….. அமெரிக்க தேர்தலை மாற்றப்போகும் ஒற்றை வாக்குறுதி… டிரம்பின் திடீர் மாஸ் அறிவிப்பு….!

Spread the love

அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்ற இடைத்தேர்தல், ஆளும் குடியரசுக் கட்சிக்குக் கடுமையான சவாலாக உருவெடுத்துள்ளது. ஈரானுடனான போர்ச் சூழல் மற்றும் நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வரும் விலைவாசி உயர்வால் மக்களிடையே எழுந்துள்ள அதிருப்தி, கருத்துக்கணிப்புகளில் எதிரொலித்து வருகிறது. இந்தத் தேர்தலில் குடியரசுக் கட்சியின் வெற்றி வாய்ப்பு மங்கலாகவே இருப்பதாகக் கூறப்படும் நிலையில், வாக்காளர்களைத் தன் பக்கம் ஈர்க்கும் வகையில் டொனால்ட் டிரம்ப் அதிரடித் தேர்தல் வாக்குறுதி ஒன்றை அறிவித்துள்ளார். டல்லாஸ் நகரில் நடைபெற்ற கட்சியின் மாநாட்டில் உரையாற்றிய அவர், இடைத்தேர்தலில் குடியரசுக் கட்சி வெற்றி பெற்றால் அமெரிக்காவில் உள்ள அனைத்துப் பெரியவர்களுக்கும் தலா 5,000 டாலர் (சுமார் ரூ.4.25 லட்சம்) ‘டிரம்ப் ஊக்கத்தொகை’ (Trump Stimulus) வழங்கப்படும் என்று கூறி மேடையை அதிர வைத்துள்ளார்.

டிரம்பின் இந்த பிரம்மாண்ட அறிவிப்பு அமெரிக்க அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தாலும், இதன் நடைமுறைச் சாத்தியங்கள் குறித்துப் பல கேள்விகள் எழுந்துள்ளன. நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான பெரியவர்களுக்கு இந்த ஊக்கத்தொகையை வழங்க சுமார் 1 டிரில்லியன் டாலர் (சுமார் ₹85 லட்சம் கோடி முதல் ₹95 லட்சம் கோடி வரை) நிதி தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வளவு பெரிய தொகையைச் செலவிட அமெரிக்க நாடாளுமன்றம் எளிதில் ஒப்புதல் அளிக்குமா என்பது சந்தேகத்திற்குரியதே. எனினும், பொருளாதாரச் சிக்கல்களால் தவித்து வரும் வாக்காளர்களைக் கவர டிரம்ப் கையில் எடுத்துள்ள இந்த பணப் பரிசு வாக்குறுதி, வரவிருக்கும் இடைத்தேர்தல் களத்தை மேலும் சூடேற்றியுள்ளது.

Nanthini

Recent Posts

அய்யய்யோ… ரீல்ஸ் மோகத்தால் நேர்ந்த கொடூரம்… கடற்கரையில் கார் சாகசம்… வாகனத்தின் அடியில் சிக்கி.. 14 வயது சிறுவன் பரிதாப பலி… நெஞ்சை பதறவைக்கும் சோகம்…!!

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள சாமக்கால் கடற்கரையில், சமூக வலைதளங்களில் 'ரீல்ஸ்' வீடியோ பதிவேற்றுவதற்காக எடுக்கப்பட்ட சாகச முயற்சி…

6 மணத்தியாலங்கள் ago

ஐயோ… காப்பாத்துங்க… நடுரோட்டில் கதறிய இளம்பெண்… தேனீக்கள் தாக்கியதில் சிதறி ஓடிய கூட்டம்… இணையத்தில் வைரல் வீடியோ…!

பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த தெருவில், இளம் பெண் ஒருவரை திடீரென தேனீக்கள் கூட்டம் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

6 மணத்தியாலங்கள் ago

ஐயோ… காப்பாத்துங்க… நொடிப் பொழுதில் நசுங்கிய ஆம்னி… மரணத்தின் பிடியில் ஓட்டுநர்… கொட்டாரக்கரையில் அதிர்ச்சி விபத்து…!!

கொட்டாரக்கரை தமராசேரி முக்கு அருகே வியாழக்கிழமை மாலை எதிரே வந்த கன்டெய்னர் லாரியும் ஆம்னி வேனும் நேருக்கு நேர் மோதி…

7 மணத்தியாலங்கள் ago

பஸ் ஸ்டாண்ட் வரைதானே… ஏறு… நடுரோட்டில் பெல்ட்டால் வெறித்தனமான தாக்குதல்… ரூ 7.45 லட்சத்துடன் மாயமான கும்பல்… இணையத்தில் ஷாக்கிங் வீடியோ…!

சுல்தான்பூர் மாவட்டம் அம்ஹத் சௌக் பகுதியில், தொழிலதிபர் ஷஷாங்க் கெளஷலை பேருந்து நிலையத்தில் இறக்கிவிடுவதாகக் கூறி காரில் ஏற்றியுள்ளனர். அம்ஹத்…

7 மணத்தியாலங்கள் ago

பிறந்தநாள் கொண்டாட்டம்…! “முகத்தில் கேக் பூசிய நண்பன் குத்தி கொலை…” நண்பர்கள் தடுத்தும் கேட்காமல் வெறிச்செயல்… நடுங்க வைக்கும் பகீர் சம்பவம்…!!

ஜம்முவின் ஜானிபூர் பகுதியில் உள்ள லோயர் ரூப் நகர் சாலையில் நீரஜ் என்ற வாலிபர், தனது தம்பி ரிஷு மற்றும்…

7 மணத்தியாலங்கள் ago

ஐயோ… பகல் நேரத்தில் நடுரோட்டில் ரத்த வெள்ளம்… கர்ப்பிணி யூடியூபரின் கணவர் கொடூரக் கொலை… நெஞ்சை நடுங்கவைக்கும் சம்பவம்…!!

தன் மனைவி வைஷ்ணவியைக் கொலை செய்த வழக்கில் பிணையில் வெளியே வந்த ஹரிபாபு என்ற நபர், நிஜாமாபாத் ஆர்.ஆர் எக்ஸ்…

7 மணத்தியாலங்கள் ago