தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் இயங்கும் ரேஷன் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. எனினும், சில கடைகளில் பணியாளர்கள் எடை குறைவாகப் பொருட்களை வழங்குவதாகவும், கூடுதல் மளிகைப் பொருட்களைக் கட்டாயப்படுத்தி விற்பனை செய்வதாகவும் தொடர் புகார்கள் எழுந்தன. இதைக் கட்டுப்படுத்தும் விதமாக, கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் லதா அனைத்து மண்டல இணைப் பதிவாளர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், கார்டுதாரர்களுக்கு எவ்விதக் குறைபாடுமின்றி சரியான அளவில் பொருட்களை விநியோகிக்க விற்பனையாளர்களுக்கு உடனடியாக அறிவுறுத்த வேண்டும் என்றும், தராசுகளின் துல்லியத்தன்மை மற்றும் விநியோகப் பொருட்களின் எடையை வார அடிப்படையில் திடீர் ஆய்வுகள் மூலம் தணிக்கை செய்ய வேண்டும் என்றும் கண்டிப்புடன் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நடைமுறைகளை மீறி முறைகேடுகளில் ஈடுபடும் ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் பாயும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. தவறிழைக்கும் விற்பனையாளர்களை உடனடியாகத் தற்காலிக பணிநீக்கம் செய்வதோடு, அவர்கள் மீது குற்றவியல் வழக்குகளும் பதிவு செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்களின் விருப்பத்திற்கு மாறாக எந்தவொரு மளிகைப் பொருளையும் கட்டாயப்படுத்தி விற்கக் கூடாது என்றும், விநியோக முறை முற்றிலும் வெளிப்படைத்தன்மையுடன் இருப்பதை அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கூட்டுறவுத் துறையின் இந்த அதிரடி உத்தரவு, ரேஷன் கார்டுதாரர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதுடன் நியாயவிலைக் கடைகளின் செயல்பாட்டையும் மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள சாமக்கால் கடற்கரையில், சமூக வலைதளங்களில் 'ரீல்ஸ்' வீடியோ பதிவேற்றுவதற்காக எடுக்கப்பட்ட சாகச முயற்சி…
பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த தெருவில், இளம் பெண் ஒருவரை திடீரென தேனீக்கள் கூட்டம் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
கொட்டாரக்கரை தமராசேரி முக்கு அருகே வியாழக்கிழமை மாலை எதிரே வந்த கன்டெய்னர் லாரியும் ஆம்னி வேனும் நேருக்கு நேர் மோதி…
சுல்தான்பூர் மாவட்டம் அம்ஹத் சௌக் பகுதியில், தொழிலதிபர் ஷஷாங்க் கெளஷலை பேருந்து நிலையத்தில் இறக்கிவிடுவதாகக் கூறி காரில் ஏற்றியுள்ளனர். அம்ஹத்…
ஜம்முவின் ஜானிபூர் பகுதியில் உள்ள லோயர் ரூப் நகர் சாலையில் நீரஜ் என்ற வாலிபர், தனது தம்பி ரிஷு மற்றும்…
தன் மனைவி வைஷ்ணவியைக் கொலை செய்த வழக்கில் பிணையில் வெளியே வந்த ஹரிபாபு என்ற நபர், நிஜாமாபாத் ஆர்.ஆர் எக்ஸ்…