“அவர் பேசவே தேவையில்லை.. மர்மமான ஈர்ப்பு…” – முதல்வர் விஜய் குறித்து த்ரிஷா சொன்ன ‘அந்த’ ரகசியம் என்ன…?

By Swetha on ஆனி 19, 2026

Spread the love

நடிகரும் தற்போதைய தமிழக முதல்வருமான விஜய் குறித்து, நடிகை த்ரிஷா சில ஆண்டுகளுக்கு முன்பு பேசிய நேர்காணல் காணொளி ஒன்று தற்போது இணையத்தில் மீண்டும் வைரலாகி வருகிறது. ஆரம்ப காலத்தில் இருந்தே விஜய்க்கு மிகவும் ராசியான ஜோடி யார் என்ற விவாதம் ரசிகர்களிடையே தொடர்ந்து நடந்து வருகிறது. சிம்ரன், சங்கவி, சமந்தா என பலர் இருந்தாலும், விஜய்க்கு த்ரிஷா தான் மிகப்பொருத்தமான ஜோடி என்று பெரும்பான்மையான ரசிகர்கள் கூறி வரும் நிலையில், இந்த பழைய காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் விவாதத்தை கிளப்பியுள்ளது.

அந்த வைரல் காணொளியில், நிகழ்ச்சி தொகுப்பாளர் விஜய்யின் புகைப்படத்தைக் காட்டி, “தளபதி விஜய்யண்ணா பற்றி ஏதாவது சொல்லுங்க” என்று த்ரிஷாவிடம் கேட்கிறார். அதற்கு சற்றும் யோசிக்காமல் த்ரிஷா, விஜய் ஒரு “சார்மர்” என்று வர்ணிக்கிறார். மேலும், விஜய்யிடம் எப்போதுமே ஒரு அமைதியான ஈர்ப்பு இருக்கும் என்றும் த்ரிஷா அந்த நேர்காணலில் நெகிழ்ச்சியோடு பகிர்ந்துள்ளார்.

   

அதனைத் தொடர்ந்து, தொகுப்பாளர் குறுக்கிட்டு “அப்படியென்றால் விஜய் ஒரு சைலண்ட் கில்லரா?” என்று கேட்க, அதற்கு த்ரிஷா “ஆமாம், அவர் ஒரு சைலண்ட் கில்லர் தான்” என்று புன்னகையுடன் ஒப்புக்கொள்கிறார். விஜய் அதிகமாக பேச வேண்டிய அவசியமில்லை என்றும், அவரிடம் எப்போதுமே ஒரு மர்மமான ஈர்ப்பு ஒளிந்திருக்கும் என்றும் த்ரிஷா பாராட்டிப் பேசியுள்ளார். விஜய்யின் அரசியல் வருகைக்குப் பின்பும், த்ரிஷாவின் இந்த பழைய பேச்சு ரசிகர்களால் தற்போது அதிகம் பகிரப்பட்டு வருகிறது.