சவுத் குயின் நடிகை திரிஷா கைவசம் இத்தனை படங்களா…? லிஸ்ட் பெருசா போகுதே..!

By Soundarya on கார்த்திகை 24, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகை திரிஷா. தென்னிந்தியாவின் குயின் என்று அழைக்கப்பட்டு வரும் இவர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். சினிமாவில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து வருகிறார் திரிஷா. விஜய் திரிஷா ஜோடி மக்கள் மத்தியில் ஹிட்டாக தொடர்ந்து திருப்பாச்சி, ஆதி, குருவி என அடுத்தடுத்து இணைத்து நடித்தனர். அதன்பின் பல வருடங்கள் கழித்து லியோ படத்தில் மீண்டும் இந்த ஜோடி இணைந்தது. விஜய் த்ரிஷா ரசிகர்கள் சந்தோசத்தில் துள்ளி குதித்தனர். கடைசியாக திரிஷா GOAT படத்தில் கேமியோ ரோலில் நடித்து மட்ட பாடலுக்கு அருமையான குத்தாட்டம் போட்டிருப்பார். இந்நிலையில் இவர் தற்போது தன் கைவசம் வைத்திருக்கும் படங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

#image_title

தக்லைப்  திரைப்படம் இந்தியா முழுவதும் மீண்டும் அனல் பறக்கும் எதிர்பார்ப்பை ஏற்படுத்த முடியும் என்பதற்கு கமல் மணிரத்தினம் கூட்டணி ஒரு உதாரணமாக இருக்கிறது. இந்த படம் 2020ஆம் வருடம் ஜூன் ஐந்தாம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தில் திரிஷா நடித்து வருகிறார்.

   
   

#image_title

 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருபவர் அஜித். இவர் நடிப்பில் விடாமுயற்சி, குட் பேட் அக்லி ஆகிய இரண்டு திரைப்படங்கள் உருவாகி வருகிறது. இந்த இரண்டு படங்களிலுமே திரிஷா நடித்துள்ளார்.

#image_title

த்ரிஷா சூர்யாவிற்கு ஜோடியாக நடித்த மௌனம் பேசியதே மற்றும் ஆறு ஆகிய இரண்டு படங்களுமே ஹிட் அடித்ததால் சூர்யா45  படத்தின் மூலம் மீண்டும் சூர்யாவிற்கு ஜோடியாக நடிக்க உள்ளார்.

#image_title

தமிழ், மலையாளம், இந்தி என பல மொழி படங்களில் கவனம் செலுத்தி வரும் நடிகை த்ரிஷா தற்போது தெலுங்கில் நடிகர் சிரஞ்சீவியின் 156வது படத்தில் நடிக்கிறார். வசிஷ்டா இயக்கும் ‘விஷ்வாம்பரா’ என்ற படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக திரிஷா நடிக்கவுள்ளார். யுவி க்ரியேஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு கீரவாணி இசையமைக்கிறார்.

#image_title

அகில் பால், அனஸ்கான் இயக்கத்தில் டொவினோ தாமஸ் நடிக்கும் புதிய படமான ‘ஐடன்டிடி’ படத்தில் ஹீரோயினாக திரிஷா நடிக்கிறார்.