டேய், நிஜமாலுமே அவன் தான் இத பண்ணானா.. ஜிவி பிரகாஷ் இசையை கேட்டு வியந்து போன பிரபல இயக்குனர்..!

By Nanthini on கார்த்திகை 24, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் தான் ஜிவி பிரகாஷ். இவர் வெயில் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மிகவும் இளம் வயதிலேயே இசையமைப்பாளராக அறிமுகமானார். தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே வேற லெவல் ஆல்பத்தை கொடுத்திருந்த இவர் அதன் பிறகு தமிழ் சினிமாவின் முன்னணி இசை அமைப்பாளராகவும் தற்போது மிக சிறந்த நடிகராகவும் உருவாகி இருக்கின்றார். மேலும் ஜிவி பிரகாஷ் குமார் ஏ ஆர் ரகுமானின் சகோதரியின் மகன்தான். சிறுவயதிலேயே ஏ ஆர் ரகுமான் இசையில் சில பாடல்களில் அவரது மழலை குரல் ஒலித்து இருக்கிறது.

பொதுவெளியில் விவாதிக்கப்படுவது துரதிஷ்டவசமானது': ஜிவி பிரகாஷ் ஆதங்கம்

   

தற்போது முன்னணி இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் நடிகராகவும் ஜொலித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் ஜிவி பிரகாஷ் சமீபத்தில் அளித்த பேட்டியில், இப்போ சினிமாவில் நிறைய பில்டர் இருக்கு. ஆனா அப்போ எனக்கு ஃபில்டரே கிடையாது. எதா இருந்தாலும் டைரக்டா பேசிடுவேன். இப்படி தான் எனக்கு காதல் பட வாய்ப்பு போச்சு. பாலாஜி சக்திவேல் சார் அந்த படத்துக்கு என்னதான் முதலில் அழைத்திருந்தார். நானும் ஒரு ad கொடுத்ததும் அவரு தம்பி நீ ரொம்ப கஷ்டப்பட்டு நிறைய பிரச்சனை எல்லாம் சந்திச்சு மியூசிக்ல பெரிய இடத்துக்கு வரணும்னு நினைக்கிறியா என்று கேட்டார்.

   

உண்மையைச் சொன்னால் ஒரு கூட்டம் திட்டத் துவங்கிவிடும்" - வசந்தபாலன் வேதனை |  nakkheeran

 

அப்படிலாம் இல்ல சார் என்னால முடிஞ்சத நான் பண்ணி இருக்கேன் நீங்க கேட்டு பாருங்க உங்களுக்கு புடிச்சிருந்தா என்ன கூப்பிடுங்க நான் சொன்னதும் அவர் செம அப்செட் ஆயிட்டாரு. அதுக்கப்புறம் நான் பீல் பண்ண பேசாம ஆமான்னு சொல்லி இருக்கலாம் என்று. ஆனா நான் உண்மையா தான் இருக்கணும்னு நினைச்சேன்.

9 வருடங்களுக்கு பிறகு மீண்டும் படம்...! காதல் பட இயக்குனரின் அடுத்த  அப்டேட்....! - தமிழ் News - IndiaGlitz.com

பிறகு பாலாஜி சக்திவேல் சார் வசந்த பாலன் சார்கிட்ட கேட்டு இருக்காரு வெயில் படத்தை பார்த்துட்டு உண்மையிலேயே இதை இவன் தான் பண்ணானா என்று கேட்டிருக்கிறார். ஆமா என்று அவர் சொன்னதும், டேய் நிஜமாலுமே நீ உன் கண்ணால பாத்தியா அவன் தான் இதை பண்ணானா என்று திரும்பத் திரும்ப சந்தேகத்துடன் கேட்டுள்ளார். ஆமா என்று வசந்தபாலன் சொன்னதும் அவரே ஆச்சரியப்பட்டுள்ளார் என்று ஜீவி பிரகாஷ் சமீபத்தில் அளித்த பேட்டியில் பேசியுள்ளார்.