“நா ரெடி தான் வரவா?” சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா செய்த செயல்.. இணையத்தில் செம வைரல்..!!!

By Swetha on வைகாசி 8, 2026

Spread the love

சமூக வலைதளங்களில் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் நடிகை த்ரிஷா, அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பகிர்ந்து ரசிகர்களை உற்சாகப்படுத்துவார். அந்த வகையில், தற்போது த்ரிஷா கையில் ஒரு பால் பாட்டிலை வைத்துக்கொண்டு, ‘தளபதி’ விஜய் நடிப்பில் வெளியான ‘லியோ’ படத்தில் இடம்பெற்ற “நா ரெடி தான்” பாடலுக்கு உற்சாகமாக நடனமாடும் வீடியோ இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.

இந்த வீடியோவில் த்ரிஷா மிகவும் ஜாலியாகவும், துள்ளலாகவும் நடனமாடுவதைக் கண்டு அவரது ரசிகர்கள் நெகிழ்ச்சியடைந்துள்ளனர். குறிப்பாக, த்ரிஷாவின் இந்த கியூட்டான மற்றும் குறும்புத்தனமான ஸ்டெப்ஸ் பலரையும் கவர்ந்துள்ளது. லியோ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த த்ரிஷா, அந்தப் படத்தின் பாடலுக்கே நடனமாடியது ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை தந்துள்ளது.

   

 

View this post on Instagram

 

A post shared by V (@vengayo__)

த்ரிஷாவின் இந்த வீடியோ வெளியான சில நிமிடங்களிலேயே லட்சக்கணக்கான பார்வைகளையும், லைக்குகளையும் பெற்று வைரலானது. “என்றும் இளமை மாறாத த்ரிஷா” என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். ‘விடாமுயற்சி’, ‘தக் லைஃப்’ என அடுத்தடுத்த பெரிய படங்களில் பிஸியாக இருக்கும் த்ரிஷாவின் இந்த எனர்ஜியான வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் ட்ரெண்டிங்கில் உள்ளது.