CINEMA
குட் பேட் அக்லி படத்தில் மீண்டும் அஜித்துடன் ஜோடி சேரும் பிரபல நடிகை.. செம குஷியில் ரசிகர்கள்..!!
பிரபல நடிகரான அஜித்குமார் மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி படத்தில் நடித்துள்ளார். கடந்த ஆண்டு இந்த படத்தில் அறிவிப்பு வெளியானது. ஆனால் ஒரு சில காரணங்களால் ஷூட்டிங் தள்ளிக் கொண்டே போனது. நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். சமீபத்தில் தான் விடாமுயற்சி படத்தின் சூட்டிங் முழுவதுமாக நடந்து முடிந்தது.
விடாமுயற்சி படத்தில் அர்ஜுன், ஆரவ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தீபாவளியை முன்னிட்டு விடாமுயற்சி படம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் குட் பேட் அக்லி திரைப்படத்தில் அஜித் நடிக்க கமிட்டானார். ஏற்கனவே படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
கடைசியாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ரிலீசான மார்க் ஆண்டனி படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. டைம் ட்ராவல் மையப்படுத்தி உருவான கதை ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தது. இப்போது குட் பேட் அக்லி படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. விடாமுயற்சி படத்தை தொடர்ந்து குட் பேட் அக்லி திரைப்படத்திலும் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா தான் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே திரிஷா, அஜித் காம்போவில் ரிலீசான ஜி, கிரீடம், என்னை அறிந்தால், மங்காத்தா உள்ளிட்ட படங்கள் சூப்பர் ஹிட் ஆனது. அந்த வரிசையில் விடாமுயற்சி, குட் பேட் அக்லி ஆகிய படங்கள் இணைந்துள்ளது. ஏற்கனவே விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடித்த லியோ திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. சவுத் குயின் என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்ட த்ரிஷா மீண்டும் கோலிவுட்டில் ஒரு ரவுண்டு வருவார் என்பதில் சந்தேகம் இல்லை.