CINEMA
கோடிகளில் புரளும் பவர் ஸ்டார் பவன் கல்யாணின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா..? தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!!
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பவன் கல்யாண். இன்று பவன் கல்யாண் தனது 52-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். நடிகர், தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர், இயக்குனர், அரசியல்வாதி என பன்முக திறமை கொண்டவர் பவன் கல்யாண். இவர் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். நடந்து முடிந்த ஆந்திர சட்டசபை தேர்தலில் பவன் கல்யாண் ஜனசேனா கட்சி சந்திரபாபு நாயுடு உடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இதன் மூலம் அந்த கட்சி 21 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
பவன் கல்யாண் தற்போது ஆந்திர மாநிலத்தின் துணை முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார். பவன் கல்யாண் நந்தினி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக நான்கு ஆண்டுகளிலேயே நந்தினி விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார். அதன் பிறகு நடிகை ரேணுதேசாய் என்பவரை பவன் கல்யாண் காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த 2008 ஆம் ஆண்டு அவரையும் பிரிந்து விட்டார். அந்த தம்பதியினருக்கு ஒரு மகன் உள்ளார்.
கடந்த 2013 ஆம் ஆண்டு நடிகை அன்னா லெஸ்நேவாவை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. பவன் கல்யாண் சொத்து மதிப்பு பற்றி உங்களுக்கு தெரியுமா? கடந்த ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தலுக்காக மனு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது பவன் கல்யாண் தனக்கு 46.17 கோடி அசையும் சொத்துக்களும் 118.36 கோடி அசையா சொத்துகளும் இருப்பதாக கூறியிருந்தார். அதனை வைத்து பார்க்கும் போது பவன் கல்யாணத்துக்கு 164 கோடி ரூபாய் சொத்து மதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.
அவரிடம் 14 கோடி ரூபாய் மதிப்புள்ள 11 சொகுசு கார்கள் இருக்கிறது. அவை ரேஞ்ச் ரோவர், ஹார்லி டேவிட்சன் உள்ளிட்ட முன்னணி பிராண்ட் கார்கள் ஆகும். கார்கள் மட்டும் இல்லாமல் தனக்கு பிடித்த பைக்குகளையும் பவன் கல்யாண் வாங்கி வைத்துள்ளார். இப்போது பவன் கல்யாண் நடிப்பில் ஓஜி என்ற தெலுங்கு திரைப்படம் உருவாகிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் பிரியங்கா மோகன் ஹீரோயினாக நடிக்க கமிட் ஆகியுள்ளார்.