கோட்டை கொத்தளத்தில் CM விஜய்…. முன்வரிசையில் மஞ்சள் புடவையில் த்ரிஷா…. பக்கத்திலேயே எஸ்.ஏ.சி…. கொடியேற்றிய விழாவில் அரங்கேறிய சென்சேஷன்…!

By Nanthini on ஆவணி 15, 2026

Spread the love

இன்றைய சுதந்திர தின விழாவில், சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் தமிழக முதலமைச்சர் விஜய் அவர்கள் முதன்முறையாக தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நிகழ்வில் முதலமைச்சரின் தோழியும் பிரபல நடிகையுமான த்ரிஷா, அழகிய மஞ்சள் நிறப் புடவையில் வருகை தந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

பார்வையாளர்கள் வரிசையின் முன்வரிசையில் விஜய்யின் பெற்றோர்களான எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் ஷோபா ஆகியோருக்கு அருகிலேயே த்ரிஷாவும் அவருடைய தாயார் உமாவும் அமர்ந்திருந்த காட்சி அங்கிருந்தோரை வியப்பில் ஆழ்த்தியது. முன்னதாக, நிலுவையில் இருந்த விவாகரத்து வழக்கு வாபஸ் பெறப்பட்டதைத் தொடர்ந்து விஜய்யின் மனைவி சங்கீதாவும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்வார் என்று தகவல்கள் பரவி வந்த நிலையில், அவரது வருகை குறித்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே விழா கோலாகலமாக நடைபெற்று முடிந்தது.