தமிழ் சினிமாவில் வெறித்தனமான ரசிகர்களைக் கொண்ட நடிகர்களில் ஒருவர் அஜித். அஜித் தனது ஆரம்ப காலகட்டங்களில் வெற்றிக்காக போராடிக் கொண்டிருந்த நிலையில் ஆசை, காதல் கோட்டை, வாலி என அடுத்தடுத்து ஹிட் கொடுத்து முன்னணி நடிகரானார். அதன் பின்னர் தீனா படத்தின் மூலம் ஆக்ஷன் ஹீரோவாக மாறிய அவர் தொட்ரந்து மாஸ் மசாலா படங்களில் நடித்து வருகிறார்.
துணிவு படத்துக்குப் பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்று வருகின்றன. சமூகவலைதளங்களில் ரசிகர்கள் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து வரும் நிலையில் “முழு சாப்பாடு சாப்பிட்ட திருப்தி” என்ற ஒரு ரசிகர் பதிவு செய்துள்ளார்.
இதுவரை பாசிட்டிவ்வான விமர்சனங்களே வந்துகொண்டிருக்கின்றன. இந்நிலையில் இந்த படத்தின் சில காட்சிகள் 2022 ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியான Last seen alive என்ற படத்தின் காட்சிகளை நினைவூட்டது போல உள்ளதாக உள்ளதாக ரசிகர்கள் கூறிவருகின்றனர். ஆனாலும் அஜித் ரசிகர்களின் அடங்காத ஆர்ப்பாட்டத்துக்கு முன்னால் இதுபோன்ற விமர்சனங்கள் எடுபடாது என்றே தோன்றுகிறது.
இந்நிலையில் விடாமுயற்சி திரைப்படம் பெரிய வெற்றி பெறும் என்றும் அஜித்தின் கேரியரில் உச்சமாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் படம் பார்த்த ரசிகர்கள் திரிஷாவின் கதாபாத்திரத்தை வெகுவாகப் பாராட்டியுள்ளனர். படத்தில் அடுத்தடுத்த அதிர்ச்சி சம்பவங்கள் நடக்க அதன் பின்னால் இருப்பது யார் என்று கண்டுபிடிக்க அஜித் போராடுகிறார்.
கடைசியில் அந்த சம்பவங்களுக்குப் பின்னால் த்ரிஷாவும் இருக்கிறார் என்பதை அறிந்து அதன் பின்னர் எடுக்கும் முடிவுகளே கதையாக உருவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் அஜித் அளவுக்கு த்ரிஷா கதாபாத்திரத்துக்கும் பாராட்டுகள் குவியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.