90ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தேவயானி. இவர் விஜய், அஜித், சூர்யா, விக்ரம் ஆகிய முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், பெங்காளி உள்ளிட்ட பழமொழி திரைப்படங்களிலும் தேவயானி ஹீரோயினாக நடித்துள்ளார்.
ஒரு கட்டத்தில் தன்னை வைத்து நீ வருவாய் என மற்றும் விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆகிய படங்களை இயக்கிய ராஜகுமாரனை காதலித்து பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொண்டார். திருமணமான பிறகு தேவயானி பல சீரியல்களிலும் நடித்து வந்தார்.
தேவயானி நடித்த கோலங்கள் சீரியல் 6 வருடம் வெற்றிகரமாக ஓடியது. அதன் பிறகு ஜீ தமிழில் ஒளிபரப்பான புது புது அர்த்தங்கள் சீரியலிலும் தேவயானி நடித்தார். இப்போதும் அவர் சீரியலில் சூப்பர் ஸ்டார் நடிகையாக வலம் வருகிறார். ஆனால் ராஜகுமாரனுக்கு அதன் பிறகு இயக்குனராகும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்நிலையில் இப்போது தேவயானியின் இரண்டு மகள்களும் வளர்ந்து இப்போது பதின் பருவத்தை எட்டியுள்ளனர். இணையத்தில் தேவயானி தன் மகள்களோடு இருக்கும் புகைப்படம் கவனம் பெற்றது.

மூத்த நடிகைகள் நேர்காணல்கள் அளிக்கும் போது அந்த காலத்தில் நாங்கள் எல்லாம் அப்படி இருந்தோம். இப்போது யாரும் எங்களை யாரும் மதிப்பதே இல்லை என்பது போல புலம்புவது வழக்கம். ஆனால் தேவயானி இதற்கு நேர்மாறானவர். அவர் அளித்துள்ள ஒரு நேர்காணலில் மிகவும் தன்னம்பிக்கையோடு பேசியுள்ளார்.
அந்த நேர்காணலில் “ஒரு காலத்தில் நான் அப்படி இருந்தேன்… ஆனா இப்போ நான் இப்படி இருக்கிறேன் என்ற வருத்தமெல்லாம் எனக்குக் கிடையாது. ஒரு படமோ, ஒரு வேடமோ என்னை யார் என்று முடிவு செய்யாது. எப்போதுமே நான் நான்தான். எப்போதுமே தேவயானி, தேவயானிதான்.” எனப் பேசியுள்ளார். சமீபத்தில் அவர் ஒரு குறும்படத்தை இயக்கி அதற்காக ஜெய்ப்பூர் திரைப்பட விழாவில் விருதும் பெற்றுள்ளார்.
