பாஜக பெண் நிர்வாகி அலிஷா அப்துல்லா குறித்து சமூக வலைத்தளங்களில் இழிவாகப் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில், கைதான திருச்சி சூர்யாவை ஒரு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் போலீசார் திருச்சி சூர்யாவைத் தங்களது காவலில் எடுத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விசாரணையின் போது, அவதூறாகப் பேசியதற்கான பின்னணி மற்றும் காரணங்கள் குறித்து போலீசார் அவரிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பி வாக்குமூலத்தைப் பதிவு செய்து வருகின்றனர். இன்று ஒரு நாள் போலீஸ் காவல் முடிவடையும் நிலையில், விசாரணை முழுமையாக நிறைவடைந்த பிறகு, திருச்சி சூர்யாவை இன்று மாலை மீண்டும் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தவுள்ளனர்.
