78 டூ 100.. 82 டூ 110.. தொகுதிக்கு ஒரு மா.செ.. திராவிட கட்சிகளை மிரளவிட்ட தவெக-வின் மாபெரும் அரசியல் ஸ்கெட்ச்..!!

By Soundarya on ஆனி 12, 2026

Spread the love

தமிழகத்தில் தவெக, திமுக மற்றும் அதிமுக ஆகிய மூன்று முக்கிய கட்சிகளும் தங்களது உட்கட்டமைப்பை பலப்படுத்துவதற்காக ஒரே நேரத்தில் அதிரடி முடிவுகளை எடுத்துள்ளன. வரவிருக்கும் தேர்தல்களை எதிர்கொள்ளும் வகையில், தங்களது மாவட்டச் செயலாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க இந்த மூன்று கட்சிகளும் திட்டமிட்டு பணிகளைத் தொடங்கியுள்ளன. ஆளுங்கட்சியான திமுகவில் தற்போதுள்ள மாவட்டச் செயலாளர்களின் எண்ணிக்கையை 78-லிருந்து 100 ஆக உயர்த்த அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார்; அதேபோல, எதிர்க்கட்சியான அதிமுகவிலும் 82 ஆக உள்ள மாவட்டச் செயலாளர்களின் எண்ணிக்கை 110 ஆக உயர்த்தப்பட உள்ளது.

இந்த இரு திராவிடக் கட்சிகளையும் மிஞ்சும் வகையில், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் ஒரு பிரம்மாண்ட முடிவை எடுத்துள்ளது. தவெக தற்போதுள்ள 132 மாவட்டச் செயலாளர்கள் என்ற அமைப்பிலிருந்து, தமிழகத்தின் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் ஒரு மாவட்டச் செயலாளர் என்ற கணக்கில் நியமிக்கத் தீர்மானித்துள்ளது. இதன் மூலம் அடிமட்ட அளவில் கட்சியை வலுப்படுத்தி, அனைத்துத் தொகுதிகளிலும் தீவிரமாகப் பணியாற்ற தவெக திட்டமிட்டுள்ளது.