“15 ஆண்டுக் காலம் வீதியைக் காத்து நின்ற ‘டாமி’… கண்ணீருடன் வழியனுப்பிய மக்கள்… கண்கலங்க வைத்த பேனர்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

By Devi Ramu on ஐப்பசி 12, 2026

Spread the love

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகரின் 3வது தெருவில் கடந்த 15 ஆண்டுகளாகப் பொதுமக்களின் செல்லப் பிள்ளையாகச் சுற்றித் திரிந்த ‘டாமி’ என்ற தெரு நாய் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தது. அந்தத் தெருவில் உள்ள ஒவ்வொரு வீட்டின் மனிதர்களோடும் ஒன்றிப் போய் வாழ்ந்து வந்த டாமியின் திடீர் மறைவு அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தங்கள் குடும்பத்தில் ஒருவரை இழந்ததைப் போல வருந்திய அப்பகுதி மக்கள், டாமியின் உடலுக்கு மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தினர். மேலும், ஊரே ஒன்றுசேர்ந்து அதற்கு முறையான இறுதிச் சடங்குகளைச் செய்ததோடு, நினைவஞ்சலி பேனர்களையும் வைத்துத் தங்கள் அன்பை வெளிப்படுத்தினர். மனிதனுக்கும் விலங்குக்கும் இடையேயான தூய்மையான பாசத்தை வெளிப்படுத்தும் இந்த நெகிழ்ச்சியான சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி பலரின் கண்களயும் குளிரச் செய்துள்ளது.